‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
அகநானூறு சுட்டும் மருதநிலச் சிறப்பு
சங்க இலக்கிய நூல்களுள் அகச் செய்திகளைக் கூறும் நூல்களில் ஒன்று அகநானூறு. மருதத்திணையின் உரிப்பொருளாக ஊடலைச் சுட்டுகின்றார் தொல்காப்பியர். மருதம், வயலும் வயல் சார்ந்த பகுதி என்று குறிப்பிடப்படுகின்றது. அவ்வகையில், அகநானூறு – மருதத்திணைப் பாடல்கள் சுட்டும் வயல்வெளிக் காட்சிகளை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வயலின் சிறப்புகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வயல் பகுதி உணவளிக்கும் அமுதசுரபியாகும். மாதம் மும்மாரி மழைபொழிந்து, முப்போகம் நெல்விளைந்து ஏழை எளியோரின் வயிற்றினை நிரப்பும் வயல் பகுதியானது கொடைத்தன்மை பெற்றதாகும்.
வயல் என்பதற்கு “கழனி, மருதநிலம், வெளி” என்று கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.
நாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்
தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும். ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.
சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன. இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர். இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.
இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை
ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தன் தவற்றை உணர்ந்த தலைவன்
தலைவன் பரத்தையோடு நெடுநாள் பழகி வந்தான். அதை அறிந்த தலைவி மனம்வருந்தி உடல் மெலிந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்த தலைவன் மீண்டும் தன் தலைவியோடு வாழவேண்டுமென வந்து சேர்ந்தான். பின் தோழியிடம் நான் பரத்தையோடு வாழ்ந்த காலங்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்றான். அதை அறிந்த தோழி காஞ்சிப் பூவோடு சினையுடைய மீன் எப்படி இருக்கும் அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்த தலைவி உன்னைத் தாழ்வாகக் கருதினாள் என்றாள், https://www.inamtamil.com/ai%E1%B9%85ku%E1%B9%9Funu%E1%B9%9Fu-marutatti%E1%B9%87aip-pa%E1%B9%ADalka%E1%B8%B7-ve%E1%B8%B7ippa%E1%B9%ADuttum-talaiva%E1%B9%89-talaiviyi%E1%B9%89-u%E1%B8%B7anilai/
ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)
நூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், ஆசிரியர் : மதுரை பாலன், பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/-
மதுரை பாலன் – அறிமுகம்
இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் நேசனேரி கிராமத்தில் 10.06.1954 இல் இருளப்பன், தீத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைப் படைப்பாளராக அறிமுகமானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நிகழ்த்தி வருகிறார். இவரின் ‘முருக விஜயம்’ இன்றளவும் நாடக உலகினரால் கொண்டாடப்படும் நாடகமாகத் திகழ்கின்றது. மேலும், வழக்காடு மன்றம், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் சின்னத்திரையிலும் தனது தடத்தினை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)