வியாழன், 25 டிசம்பர், 2014

தமிழும் அதன் இலக்கண நூல்களும்


முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9600370671

தமிழ் தமிழர்களினது தாய்மொழியாம். இது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது. ம்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, ரீயூனியன், திரினிடாட்டு போன்ற நாடுகளில் குறைவாகவும் பேசப்படுகிறது.
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் ஏறத்தாழ ஓரிலக்கக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தொல்லெழுத்துப் பதிவுகளில் அறுபதினாயிரத்திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ தொன்னூற்றைந்து விழுக்காடு தமிழில் உள்ளன. பிற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் [பிரதி பண்ணுவது] மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. இச்சிறப்புமிகு மொழியில் உள்ள இலக்கணங்களைப் பட்டியலாகத் தொகுத்துத் தருகின்றது இக்கட்டுரை.

          தமிழ்மொழியில் இருநூற்றுக்கும் அதிகமான இலக்கண நூல்கள் உள்ளன. தொல்காப்பியம் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரை பல இலக்கண நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்களை,
·         மொழியமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
·         ஐந்து இலக்கணக் கூறுகளையும் பேசும் இலக்கண நூல்கள்
·         பொருள் அமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
·         யாப்பமைதியை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
·         அணியமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
·         பாட்டியல்வகை இலக்கண நூல்கள்
·         புலமை, தவ அமைப்புகளையும் பேசும் இலக்கண நூல்கள்
·         உரை வடிவ இலக்கண நூல்கள்
·         உரைகள்
·         நிகண்டுகள்
·         மொழியாக்கம் செய்யப் பெற்ற இலக்கண நூல்கள்
·         மறைந்து போன இலக்கண நூல்கள்
·         பிறமொழிகளில் அமைந்த தமிழ் இலக்கண நூல்கள்
மொழியமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
          ஒரு மொழியமைப்பை விளக்க எழுத்து, சொல் ஆகிய இரு கருத்தியல்கள் முக்கியமானவை. ஆகவே, சமசுகிருதம் போல்வன மொழிகளுக்குரிய இலக்கண நூல்கள் சொல்லிலக்கணத்துக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் தந்துள்ளன. தமிழில் மொழியமைப்பையும், இலக்கிய அமைப்பையும் இணைத்தும் சில இலக்கண நூல்கள் பேசியுள்ளன. அதுமட்டுமின்றி, யாப்பு, அணி ஆகிய இலக்கணக் கூறுகளையும் ஒரே நூலில் விளக்கும் முயற்சியும் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. இவ்வாறு அமையும் நூல்கள் ஐந்து இலக்கண அமைப்புகளையும் பேசும் இலக்கண நூல்கள் எனும் பட்டியலில் வைக்கப் படுகின்றன. இங்கு எழுத்து, சொல் ஆகிய கருத்தியல்களை மட்டும் பேசும் நூல்களின் பட்டியல் தரப்பெறுகின்றது.
1.    நேமிநாதம் – குணவீரபண்டிதர் (கி.பி.12)
2.    நன்னூல் – பவணந்தியார் (கி.பி.13)
3.    தமிழ் இலக்கணக்கும்மி – புலவர் துரை கனகசபை (கி.பி.1970)
4.    தமிழ் நூல் (தமிணூல்) – புலவர் த.சரவணத்தமிழன் (கி.பி.1972)
இவை எழுத்து, சொல் ஆகிய கருத்தியல்களை மட்டும் பேசுபவை.
5.    பிரயோக விவேகம் – சுப்பிரமணிய தீட்சிதர் (கி.பி.17)
6.    இலக்கணக்கொத்து – சுவாமிநாத தேசிகர் (கி.பி.17)
இவ்விரண்டும் சொல்லிலக்கணம் மட்டும் விளம்புபவை.
ஐந்து இலக்கணக் கூறுகளையும் பேசும் இலக்கண நூல்கள்
          எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணக் கூறுகளையும் ஒரே நூலில் விளம்பக்கூடிய இலக்கண நூல்கள் சிலவும் உண்டு. அவ்விலக்கண நூல்களின் பட்டியல் வருமாறு:
7.    தொல்காப்பியம் – தொல்காப்பியர் (கி.மு.5)
8.    அவிநயம் – அவிநயனார் (கி.பி.6)
9.    வீரசோழியம் – புத்தமித்திரனார் (கி.பி.11)
10. இலக்கணவிளக்கம் – வைத்தியநாத தேசிகர் (கி.பி.17)
11. தொன்னூல் விளக்கம் – வீரமா முனிவர் (கி.பி.17)
12. முத்துவீரியம் – முத்துவீர உபாத்தியாயர் (கி.பி.19)
13. சுவாமிநாதம் – சுவாமி கவிராயர் (கி.பி.19)
14. தென்னூல் – ? (1991)
15. இனிய தமிழ் இலக்கணம் – கவியோகி சுத்தானந்த பரதியார் (கி.பி.1964)
16. தமிழ் காப்பு இயம் – புலவர் காசுமான் (2005)
பொருள் அமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
          தமிழ்மொழியின் இலக்கண நூல்களுக்குச் சிறப்பு எதுவெனில், இலக்கியத்தையும் பாடுபொருளாகக் கொண்டு இலக்கணம் வகுத்தமையேயாம். ஆக, அவ்வகை இலக்கணக் கூற்றைத் தனித்து விளக்கும் நூல்களும் எழுதப்பட்டன. அவ்வரிசையில் வரும் இலக்கண நூல்கள் வருமாறு:
17. இறையனார் அகப்பொருள் – இறையனார் (கி.பி.7)
18. தமிழ்நெறி விளக்கம் – ? (கி.பி.10)
19. நம்பியகப்பொருள் – நாற்கவிராச நம்பி (கி.பி.12)
20. களவியற் காரிகை – ? (கி.பி.13)
21. மாறன் அகப்பொருள் – திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (கி.பி.10)
இவை அகப்பொருள் பற்றியன.
22. பன்னிருபடலம் – பன்னிருவர் (கி.பி.8)
23. புறப்பொருள் வெண்பாமாலை – ஐயனாரிதனார் (கி.பி.9)
இவ்விரண்டும் புறப்பொருள் பற்றியன.
யாப்பமைதியை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
          பாப்புனைய யாப்பிலக்கணம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். யாப்பு அறியாமல் பாப்புனைய இயலாது. ஆகவே, பிறமொழிகளிலும் யாப்புக்கான இலக்கண நூல்கள் மிகுதியாக எழுத்தப்பட்டுள்ளமையை உணர்ந்து கொள்ளலாம். தமிழிலும் சில யாப்பு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. அந்நூல்களின் பட்டியல் பின்வருமாறு:
24. சிறுகாக்கைப் பாடினியம் – சிறுகாக்கைப் பாடினியார் (கி.பி.7)
25. நற்றத்தம் – நற்றத்தனார் (கி.பி.7)
26. பல்காயம் – பல்காயனார் (கி.பி.6)
27. மயேச்சுவரம் – மயேச்சுவரர் (கி.பி.6)
28. அமுதசாகரம் – அமுதசாகரர் (கி.பி.10)
29. யாப்பருங்கலம்அமிதசாகரர் (கி.பி.10)
30. யாப்பருங்கலக் காரிகைஅமிதசாகரர் (கி.பி.10)
31. பாப்பாவினம் – திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (கி.பி.16)
32. சிதம்பரச் செய்யுட்கோவைகுமரகுருபரர் (கி.பி.17)
33. வண்ணத்தியல்புவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (கி.பி.19)
34. விருத்தப்பாவியல்வீரப்ப முதலியார் (கி.பி.20)
35. பெரும்பொருள் விளக்கம் – ?
36. யாப்புநூல்புலவர் த.சரவணத்தமிழன் (கி.பி.1986)
37. யாப்பதிகாரம்புலவர் குழந்தை (2006)
38. பாட்டுத்திறன்என்.சுப்புரெட்டியார் (1999)
39. கவிபாடலாம்கி.வா.ஜகந்நாதன் (2008)
அணியமைப்பை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள்
          அணியமைப்பை விளக்கவும் சில இலக்கண நூல்கள் எழுதப்பட்டன். அந்நூல்கள் அடங்கிய பட்டியல் பின்வருமாறு:
40. தண்டியலங்காரம் – தண்டியார் (கி.பி.12)
41. மாறனலங்காரம் – திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (கி.பி.16)
42. இரத்தினச் சுருக்கம் – புகழேந்திப் புலவர் (கி.பி.19)
43. உவமான சங்கிரகம் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர் (கி.பி.19)
44. சந்திரலோகம் – முத்துசாமி ஐயங்கார் (கி.பி.19)
45. குவலாயனந்தம் 1 – மாணிக்கவாசகர் (கி.பி.19)
46. குவலாயனந்தம் 2 – அப்பைய தீட்சிதர் (கி.பி.19)
பாட்டியல்வகை இலக்கண நூல்கள்
          யாப்பியல் அல்லது செய்யுளியலானது தனிநிலைச் செய்யுளின் இலக்கணம் கூறுவது ஆகும். தனிநிலைச் செய்யுள் சிலவிடத்து இலக்கியங்களாக மலருவதும் உண்டு. அவ்வாறு மலரும் இலக்கியங்கள் உலா, தூது என்பனவாக அமையும். இப்பாட்டியலாவது தொடர்நிலைச் செய்யுளுக்குரிய இலக்கணக் கூறுகளை விளக்கும் நூலாகும். இது தூக்கியல், கலாவியல், கவியியல், கவித்தொகை, பாவியல் என்னும் பெயர்களாலும் வழங்கப் பெறுகின்றது (மருதூர் அரங்கராசன், 1983:57). இவ்வகை நூல்களின் பட்டியல் பின்வருமாறு:
47. இந்திரகாளியம் – இந்திரகாளியர் (கி.பி.9)
48. வெண்பாப் பாட்டியல் – குணவீர பண்டிதர் (கி.பி.12)
49. பன்னிரு பாட்டியல் – பதினைவர் (கி.பி.14)
50. நவநீதப் பாட்டியல் – நவநீதனார் (கி.பி.14)
51. வரையறுத்த பாட்டியல் –  ? (கி.பி.16)
52. சிதம்பரப் பாட்டியல் – பரஞ்சோதியார் (கி.பி.16)
53. பிரபந்த தீபம் –  ? (கி.பி.19)
54. பிரபந்த திரட்டு –  ? (கி.பி.19)
55. பிரபந்த மரபியல் –  ? (கி.பி.19)
56. பிரபந்த தீபிகை –  முத்து வேங்கட சுப்பையர் (கி.பி.19)
57. பொருத்த விளக்கம் –  காதிறு புலவர் (கி.பி.19)
இவை அச்சேற்றம் பெறபட்டவை. இன்னும் சில அச்சேறாமல் கிடக்கின்றன (மருதூர் அரங்கராசன், 1983:393). அந்நூல்கள் வருமாறு: பாட்டியன் மரபு, தத்தாதிரேயப் பாட்டியல், பருணர் பாட்டியல், வாருணப் பாட்டியல், பெரிய முப்பழம், கல்லாடனார் கலாவியல், மாமூலர் பாட்டியல், திரப்பிரவாசிரியர் தூக்கியல், செய்யுள் வகைமை, முள்ளியர் கவித்தொகை, பண்டாரப் பாட்டியல், பொருத்தப் பாட்டியல், பொய்கையார் பாட்டியல், சண்முகப் பாட்டியல், அகத்தியர் பாட்டியல் போல்வன.
புலமை, தவ அமைப்புகளையும் பேசும் இலக்கண நூல்கள்
          தமிழ் இலக்கண வரலாற்றில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணக் கூறுகளுடன் புலமை, தவம், அணி என ஐந்து இலக்கணகூறுகளுடன் புலமை, தவம் ஆயிரு இலக்கணக் கூறுகளையும் இணைத்துப் பேசக்கூடிய இலக்கணங்கள் தோன்றின. அவை முறையே புலமையை ஆறாம் இலக்கணமாக அறுவகை இலக்கணமும், தவத்தை ஏழாம் இலக்கணமாக ஏழாம் இலக்கணமும் பேசியுள்ளன. இவிவிரு நூல்களையும் யாத்தவர் தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார். இவரின் காலம் கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டாகும்.
உரை வடிவ இலக்கண நூல்கள்
செய்யுள் வடிவம் மாறி மாணாக்கர்களின் எளிமை கருதியும் சில உரைவடிவ நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. அந்நூல்களின் பட்டியல் பின்வருமாறு:
58. கால்டுவெல் ஒப்பிலக்கணம் – கால்டுவெல் (கி.பி.1856)
59. விசாகப் பெருமாளையர் அணியிலக்கணம் – விசாகப் பெருமாளையர் (கி.பி.1828)
60. இலக்கண விளக்கச் சுருக்க வினா விடை – விசாகப் பெருமாளையர் (கி.பி.1828)
61. இலக்கணச்சந்திரிகை – சுன்னாகம் அ. குமராசாமிப் பிள்ளை (கி.பி.1828)
62. செய்யுள் இலக்கணம் – அட்டாவதானம் கலியிளை சுந்தர யதீந்திரர் (கி.பி.1893)
63. சித்திரகவி விளக்கம் – சூரியநாராயண சாத்திரியார் (கி.பி.1828)
64. பஞ்ச லட்சணம் – ? (கி.பி.1903,1918)
65. பஞ்ச லட்சணம் – செல்வகேசவராய பிள்ளை (கி.பி.1966)
66. கல்லூரித் தமிழ் இலக்கணம் – புலவர் அரசு (1962)
67. வாக்கிய இலக்கண சிந்தாமணி – ? (1922)
68. வாக்கிய இலக்கணம் – கா.ரா.கோ.
69. புலவர் வினா விடை – ?
70. தவறின்றித் தமிழ் எழுத – மருதூர் அரங்கராசன் (2004)
71. ஸ்ட்ரக்சுரலிசம் – தமிழவன் (1982)
72. இனிய தமிழ் எளிய இலக்கணம் – க.இராமச்சந்திரன் (2001)
73. தமிழ் இனிது – ச.பா.அருளானந்தம் (1992)
74. வள்ளுவர் தமிழ் இலக்கணம் – புலவர் குழந்தை (2007)
75. தமிழ் இலக்கணம் – வி.மரிய அந்தோணி & க.திருமாறன் (1989)
76. தமிழைத் திருத்தமக எழுதுவது எப்படி? – சொ.ஞானசம்பந்தன் (2000)
77. இலக்கணத் தடம் எழுத்து – துரை.தில்லான் (2008)
78. செந்தமிழா? கொடுந்தமிழா? – ம.நன்னன் (2007)
79. உரை நடையா? குறை நடையா? – ம.நன்னன் (2004)
80. உரைநடை எழுத வேண்டுமா? – ம.நன்னன் (1923)
81. தமிழா எது வேண்டும்? தமிழா? கிமிழா? – ம.நன்னன் (2011)
82. எழுதுகோலா? கன்னக்கோலா? – ம.நன்னன் (2008)
83. கெடுவது காட்டுங் குறி – ம.நன்னன் (2009)
84. கல்விக் கழகு கசடற எழுதுதல் – ம.நன்னன் (2001)
85. செந்தமிழைச் செத்த மொழியாக்கி விடாதீர் – ம.நன்னன் (2010)
86. பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? – ம.நன்னன் (2006)
87. இலக்கண மணிமாலை – பி.எஸ்.டி. முத்துசாமி பிள்ளை (1973)
88. கல்லூரித் தமிழ் இலக்கணம் – சொ.பரமசிவம் (1966)
89. சுதந்திரத் தமிழ் இலக்கணமும் உரைநடையாக்கமும் – ல.இலட்சுமி நரசிம்மன்
90. இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள் – கோ.பெரியண்ணன் (2002)
91. எப்படி நல்ல தமிழ் எழுதுவது – இரா.வள்ளிமணாளன் (2005)
92. தமிழில் பிழைகள் தவிர்ப்போம் – அ.சா.குருசாமி (1998)
93. நல்ல தமிழ் கற்க! கையாள! – சுவை.மருதவாணன் (2011)
94. புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம் – பாலூர் கண்ணப்ப முதலியார் (2009)
95. பளிங்குத் தமிழை பழுதின்றி எழுத – பெ.பாலகிருட்டிணன் (2008)
96. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி.பரந்தாமன் (1955)
97. இலக்கணத் துணைவன் (அடிப்படை இலக்கணமும் மொழிப்பயிற்சியும்) – தி.இராசகோபாலன் (1997)
98. செந்தமிழ் இலக்கணம் – தி.இராசகோபாலன் (1997)
99. பயன்பாட்டு இலக்கணம் – சிவ.விவேகானந்தன் (2008)
100.      தமிழ் மலர்ப் பூஞ்சோலை – துரை (2011)
101.      வளர்தமிழ் இலக்கணம் – ச.பாலசுந்தரம் (2003)
102.      எளிமைத் தமிழ் இலக்கணம் – லேணா தமிழ்வாணன் (1980)
103.      தமிழ்க் குன்றம் – பி.விருத்தாச்சலம் (2007)
104.      இலக்கணச் சாரம் – கோ.செயதிரு (2008)
105.      தமிழ் பிழையின்றி எழுதுவோம் – சு. பாலசுப்பிரமணியன் (2001)
106.      எளிமைத் தமிழ் – த.கோடப்பிள்ளை (2004)
107.      பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி? – லேணா தமிழ்வாணன் (1980)
108.      இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம் – இந்திரா மணியன் (1999)
109.      பஞ்சதசப்பிரகரணம் – சத்தியாரண்ணியர் (1872)
110.      எளிய முறையில் இனிய தமிழ் (மாணாக்கர்களுக்குரிய இலக்கணநூல்) – து.இராசகோபால் (2006)
111.      அடிப்படைத்தமிழ் – இரா.கலையரசி & அரங்க.மீனா (2010)
112.      பிழையின்றித் தமிழ் எழுத – மு.நக்கீரன் (2011)
113.      தேர்வுக்கான தமிழ் இலக்கணம் – சின்னசேகர் செண்பக வடிவு (2003)
114.      தமிழ் இலக்கண விதிகள் – தமிழ்ப் பிரியன் (2012)
115.      எளிய முறையில் தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்வது எப்படி? – வீரா.பாலசுப்பிரமணியன் (2002)
116.      தமிழ் இலக்கணம் புதிய அறிமுகம் – வசந்த் செந்தில் (2000)
117.      தமிழ்ச் சுடர் இலக்கண விளக்க நூல் – கபிலவாணன் (1988)
118.      தமிழ் இலக்கணமும் உரையும் – பொன்னையா
119.      கல்லூரி இலக்கணச் சுருக்கம் – செ.சதாசிவம் (1944)
120.      தமிழ் இலக்கணம் – வி.மரிய அந்தோணி (1954)
121.      கற்று பின்பற்று (எழுத்திலக்கணம்) – நாமக்கல் நாதன் (2006)
122.      தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுதலாம் (சந்தி இலக்கணம்) – பொற்கோ (1992)
123.      இலக்கண உலகில் புதிய பார்வை – பொற்கோ (1973)
124.      மணிமொழிப் பாட்டியல் – தமிழப்பன் (2002)மாணவர்களுக்கான மணித்தமிழ் இலக்கணம் – அ.கு.முரளிதரன் (1998)
125.      தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம் – தி.முத்து – கண்ணப்பர் (1986)
126.      நற்றமிழ் இலக்கணம் – சொ.பரமசிவம் (?)
127.      மொழியாக்க நெறி மரபிலக்கணம் – பாவலரேறு ச.பாலசுந்தரம் (1998)
128.      தமிழ் இலக்கண நூல் சுருக்க வினாவிடை – ஜி.யு.போப் (1985)
129.      இலக்கணத் திறவுகோல் – மு.சிவச்சந்திரன் (2006)
130.      பிழையின்றி எழுத – ச.சாம்பசிவனார் (1996)
131.      பயன்பாட்டுத் தமிழ் இலக்கணம் – தி.நடராசன் (1997)
132.      பிழையின்றித் தமிழ் எழுதுவோம் – என்.திருதரன் (2008)
133.      தமிழ் இலக்கணக் கையேடு – அர.கமலதியாகராசன் (2002)
134.      தமிழ் இலக்கணத் தெளிவுரை – ஏ.லோகநாதன் (2002)
135.      தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி – கோ.இளையபெருமாள் (1985)
136.      எப்படி எழுதுவது? – வீ. இராசமாணிக்கம் (1982)
137.      மேனிலைத் தமிழ் இலக்கணம் – கவியழகன் (1999)
138.      தமிழ்ச்சொல் விளக்கம் – முல்லை.பி.எல்.முத்தையா (2004)
139.      அனைவருக்கும் பயன்தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம் – தமிழ்ப்பிரியன் (2011)
140.      தமிழ் பேசுகிறேன் – த.கோட்டப்பிள்ளை (2003)
141.      தமிழ் அமுது – ச.பா.அருளானந்தம் (1993)
142.      புது மாற்றிலக்கணம் – செ.சண்முகம் (2007)
143.      இலக்கண விளக்கம் – கே.இராஜகோபாலாச்சாரியார் (1997)
144.      எளிய முறையில் தமிழ் இலக்கணம் – வ.சிவராமன் (2007)
145.      மாணவர் தமிழ் இலக்கணம் – கவியழகன் (1999)
146.      எளிய முறையில் தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்வது எப்படி – வீரா.பாலசுப்பிரமணியன்
147.      தமிழ்ச்சுடர் இலக்கண விளக்க நூல் – கபிலவாணன் (1998)
148.      மாணவருக்கான தமிழ் இலக்கணம் – இரா.கபிலன் (1989)
149.      பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் – செந்துறை முத்து (2002)
150.      பிழையே வராமல் தமிழ் எழுதுவது எப்படி? – சிவ.முருகேசனார் (2004)
151.      உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – தமிழண்ணல் (2008)
152.      இலக்கணம் இனிக்கிறது – இரா.திருமுருகன் (2006)
153.      தமிழ் இலக்கணம் – ஆறுமுகநாவலர் 1886
154.      அடிப்படைத் தமிழ் இலக்கணம் - நுஃமான், எம். ஏ. 1999
156.      அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்தமிழ்ப்பிரியன் எம்.ஏ
157.      தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!அ.சா.குருசாமி
158.      இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் சிங்கப்பூர் சித்தார்த்தன் 
உரைகள்
நூற்பா வடிவில் எழுதப்பெற்ற இலக்கண நூல்களுள் சிலவற்றிற்கு நூலாசிரியர் தவிர்த்த வேறொருவர் உரை செய்தனர். அவ்வரிசையில் தொல்காப்பியம், நன்னூல் போல்வன இடம்பெறுகின்றன. அப்பட்டியல் வருமாறு: தொல்காப்பித்திற்கான உரைநூல்களாக இளம்பூரணம், சேனாவரையம், பேராசிரியம், நச்சினார்க்கினியம், கல்லாடம், தெய்வச்சிலையம், பழைய உரை, தொல்காப்பிய சூத்திர விருத்தி, தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிர விருத்தி, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் பொருட்படலப் புத்துரை, புலவர் குழந்தையுரை, தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும் (தமிழண்ணல்) போல்வன.
நன்னூலுக்கான உரைநூல்களாக மயிலைநாதர் உரை, ஊற்றாங்கால் ஆண்டிப் புலவருரை, சங்கர நமச்சிவாயருரை, சிவஞான முனிவர் புத்தம் புத்துரை, கூழங்கைத் தம்பிரான் உரை, இராமனுசக் கவிராயர் உரை, விசாகப் பெருமால்ளையர் உரை, ஆறுமுக நாவலருரை, சடகோப ராமாநுசாசாரியார் உரை போல்வன.
நிகண்டுகள்
தொல்காப்பியர் குறிப்பிட்ட உரிச்சொல்லிலக்கணம் அகரநிரல் தன்மையின. இதன் வளர்ச்சி பிற்காலத்தில் நிகண்டாகவும், அதன்பின்பு அகராதியாகவும் ஆக்கம் பெற்றன. அவற்றுள் நிகண்டாக அமைந்தவற்றின் பட்டியல் வருமாறு:
1.    அகராதி நிகண்டு – சிதம்பர இரேவண சித்தர்
2.    அகராதி நிகண்டு (ஒருசொல் பலபொருட் டொகுதி) – ?
3.    அகராதி நிகண்டு – தாயவலம் தீர்த்த கவிராயர்
4.    அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு – கோபாலசாமி நாயகர்
5.    அபிதான மணிமாலை – திருச்சிற்றம்பலம் இன்னமுதம் பிள்ளை
6.    அரும்பொருள் விளக்க நிகண்டு – அருமருந்து தேசிகர்
7.    ஆசிரிய நிகண்டு – ஆண்டிப் புலவர்
8.    ஆசிரிய நிகண்டு – ?
9.    உசித சூடாமணி நிகண்டு – சிதம்பரம் பிள்ளை
10. உசித சூடாமணி நிகண்டு – திருநெல்வேலி சிதம்பரக் கவிராயர்
11. உரிச்சொல் நிகண்டு – காக்கேயர்
12. ஏமதத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு – அகத்தியர்
13. ஔவை நிகண்டு – ஔவையார்
14. கயாதர நிகண்டு – கயாதரர்
15. கைலாச நிகண்டு  – ?
16. சிந்தாமணி நிகண்டு – வ.வைத்தியலிங்கம் பிள்ளை
17. சூடாமணி உள்ளமுடையாள் (சோதிடம்) – பாண்ட மங்கை திருக்கோட்டி நம்பி
18. சூடாமணி நிகண்டு – மண்டல புருடர்
19. சேந்தன் திவாகர நிகண்டு – திவாகரர்
20. தன்வந்திரி நிகண்டு (வைத்தியம்) – தன்வந்திரி
21. தொகை அகராதி  – ?
22. தொகை நிகண்டு – சாமிக் கவிராயர்
23. தொகைப்பொருள் நிகண்டு – கிருட்டினசாமி சேனை நாட்டார்
24. நவமணிக் காரிகை நிகண்டு – அரசஞ் சண்முகனார்
25. நாநார்த்த தீபிகை நிகண்டு – முத்துசாமி பிள்ளை
26. நாமதீப நிகண்டு – சிவசுப்பிரமணியக் கவிராயர்
27. நிகண்டு – ?
28. நிகண்டு ஆயிரத்திருநூறு (வை) – போகமுனிவர்
29. பல்பொருட் சூடாமணி நிகண்டு – ஈசுவர பாரதியார்
30. பாரதி தீப நிகண்டு – தென்கடம்பைத் திருவேங்கட பாரதி
31. பிங்கல நிகண்டு – பிங்கல முனிவர்
32. பிடக நிகண்டு – ஔவையார்
33. பொதிகை நிகண்டு – சாமிநாதக் கவிராசர்
34. பொருட்டொகை நிகண்டு – வே.சுப்பிரமணிய பாரதி
35. வாத நிகண்டு – சட்டை முனி
36. பொருள் விளக்க நிகண்டு – ஆனைகட்டி முனுசாமி முதலியார்
37. போகர் நிகண்டு – போக முனிவர்
38. மஞ்சிகன் ஐந்திணைச் சிறுநிகண்டு – மாகறல் கார்த்திகேய முதலியார்
39. வடமலி நிகண்டு – ஈசுவர பாரதியார்
40. வாத நிகண்டு – சட்டை முனி
41. விரிவு நிகண்டு – வீரவ நல்லூர் நா.அருணாசல நாவலர்
42. வேதகிரியார் சூடாமணி நிகண்டு – வேதகிரியார்
மொழியாக்கம் செய்யப் பெற்ற இலக்கண நூல்கள்
          தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன. அவை குறித்த பட்டியல் வருமாறு:
1.    தொல்காப்பியம் – முனைவர் சி.சாவித்ரி (தெலுங்கு)
2.      Tolkāppiyam Phonology & Morphology – Dr.D.Albert (English)
3.      Tolkāppiyam Collatikaram – ? (1930)
4.      Tolkāppiyam Porulathikaram – E.S.Varatharajar (1948)
5.      Tolkāppiyam Moolam Jeyaram Mudalai (1928)
6.      The ancient Tamil as Biked in Tolkāppiyam Porulathikaram – S.K.Pillai (1934)
7.      Tolkāppiyam (Collatikaram) – P.S.Subrahmanian (1979)
மறைந்து போன இலக்கண நூல்கள்
          ஏட்டுச் சுவடிகளில் இருந்த சில இலக்கண நூல்கள் அறியாமையினால் அழிந்து போயின. இதனைத் தொகுத்துத் தந்த பெருமைக் குரியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார். மறைந்துபோன இலக்கண நூல்களின் பட்டியல் வருமாறு: அகத்தியர் பாட்டியல், அடிநூல், அணியியல், அவிநயனார் கலாவியல், ஆனந்த வோத்து, இலக்கணக் களஞ்சியம், இலக்கணக்கோவை, இலக்கணச் சந்திரிகை, இலக்கணச்சுருக்கம், இலக்கணகாரம், இலக்கண சிந்தாமணி, இலக்கண சூடாமணி, இலக்கணத் திரட்டு, இலக்கணத் தீபம், இலக்கண நூலாதரம், இலக்கணம், இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, இலக்கண வினா விடை, இளந்திரையம், இன்மணியாரம், ஊசிமுறி, எழுத்து என்னும் சொல்லுக்கு இட்ட வயிரக்குப்பாயம், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம், கவிசாகரம், கவிமயக் கறை, கிரணியம், குமரம், குறுவேட்டுவச் செய்யுள் கையனார் யாப்பியல், கொடுந்தமிழ், கோவை சாரம், சயந்தம், சாதவாகனம், சித்திரகவி, சித்திரகவி விளக்கம், சிற்றட்டகம், சிற்றிசை, செந்தமிழ், செய்யுளியல், செய்யுள் வகைமை, செயிற்றியம், தக்காணியம், தத்தாத்திரேயப் பாட்டியல், தமிழ் இலக்கண சிந்தாமணி, தமிழ் இலக்கணச் சுருக்கம், தமிழ் இலக்கணத் தீபிகை, தமிழ் இலக்கண நூற்சுருக்க வினா விடை, தினைநூல், திருப்பிரவாசிரியர் தூக்கியல், தொனி விளக்கு, நக்கீரர் நாலடி, நல்லாறன் மொழிவரி, நன்னூல்இலகுபோதம், பரிப்பெருமாள் இலக்கண நூல், பரிமாணனார் யாப்பிலக்கணம், பருணர் பாட்டியல், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பனம்பாரம், பாட்டியல் மரபு, பாடலம், பிரபந்த மரபியல், புணர்ப்பாவை, புறப்பொருள் விளக்க வசனம், பூத புராணம், பெரிய முப்பழம்பெருவள நல்லூர் பாசாண்டம், பொய்கையார் களவியல், பொய்கையார் பாட்டியல், போக்கியம், போப்பையர் இலக்கணம், மாபுராணம், முதலிலக்கணம், முள்ளியார் கவித்தொகை, யாப்பியல், யாப்பிலக்கணச் சுருக்கம், யாப்பிலக்கண சூசனம், யாப்பிலக்கணம், லோக விலாசனி, வண்ணத்தியல்பும் வண்ணமும், வாருணப் பாட்டியல், வினைச் சொல்விளக்கம், வினைமரபு விளக்கம், வினையுருவ விளக்கம் ஆகியனவாம்.
பிறமொழிகளில் அமைந்த தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் மொழியின் இலக்கணக் கூறுகளைப் பிறமொழி அறிஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. அந்நூல்களின் பட்டியல் வருமாறு:
1.    A progressive grammar of the Tamil language revised by A.C. Clayton. 5th ed. Madras : Christian Literature Society, 1942; reprinted 1976
2.    Arden, Albert Henry: A companion reader to Arden’s progressive Tamil grammar: Madras : Society for promoting Christian knowledge, 1914
3.    Beschi, C.G: A grammar of the high dialect of the Tamil language called centamil. 1974.
4.    Caldwell, R,: A comparative grammar of the Dravidian, or, South-Indian family of languages, London : Harrison, 1856.; Reprinted London, K. Paul, Trench, Trubner & co., ltd., 1913.
5.    Jensen, H: A practical Tamil reading book for European beginners, Madras : Memorial Press, 1882.
6.    Lazarus, J.: Tamil grammar: designed for use in colleges and schools, Madras : Printed by Addison, 1878.
7.    Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.
8.    Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981
9.    Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.
10.  Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.
11.  Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926
12.  Pope, G. U. : Pope’s third Tamil grammar ... 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.
13.  Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with... 2nd ed Madras : P.R. Hunt, 1859.
14.  Rhenius, C T E. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853.
15.  Vinson, Julien: Manuel de la langue tamoule (grammaire, textes, vocabulaire): Paris Imprimerie nationale, E. Leroux, editeur, 1903; Reprinted New Delhi : Asian Educational Services, 1986.
16.  Vinson, Julien : Le verbe dans les langues dravidiennes : tamoul, canara, telinga, malayala, tulu, etc., Paris : Maisonneuve et cie, 1878.
17.  Ziegenbalg, B: Grammatica damulica von Bartholomaeus Ziegenbalg, herausgegeben von Burchard Brentjes und Karl Gallus. Halle : Martin-Luther-Universitat Halle-Wittenberg, c1985.
துணைநின்றன
1.    அரங்கராசன் மருதூர், 1983, இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள், பாலமுருகன் பதிப்பகம், திருச்சி.
2.    இளங்குமரன் இரா., 1999, இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3.    இளவரசு சோம., 2003, இலக்கண வரலாறு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
4.    சுப்பிரமணியன் ச.வே., 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
5.    நாச்சிமுத்து கி., 1986, டாக்டர் உ.வே.சா., இலக்கணப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
இணையம்
http://bookday.co.in/?p=138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன