சுவாமிநாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமிநாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 அக்டோபர், 2013

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.