தெலுங்கு


தெலுங்கும் அதன் இலக்கணங்களும்
                                             - த.சத்தியராஜ்

தென்னிந்திய ந்திரரின் தாய்மொழியாக விளங்குவது தெலுங்கு. இம்மொழி இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்று. இது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9,30,00,000 (93மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். இம்மொழி 2008ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிற்கு எழுத்து வடிவிலான இலக்கிய (ஆந்திர மகாபாரதம்) இலக்கண (ஆந்திரசத்தசிந்தாமணி) வளங்களின் தொடக்கம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு என்பது அதன் வரலாறு காட்டும் உண்மை. அதன்பின்பு அதன் வளர்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்தது. இருப்பினும் அதற்கு முன்பும் இலக்கிய இலக்கண வளங்கள் பரந்துவிரிந்திருந்தமையை அவ்வரலாறுகள் சுட்டத் தவறவில்லை. அதன் இலக்கிய வரலாற்றை,
1.    நன்னயருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை, 2
2.    புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
3.    ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
4.    பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
5.    தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
6.     நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
எனப் பாகுபடுத்திக் காட்டுவதின்வழி அவ்வுண்மையை அறியலாம். இக்கட்டுரை தெலுங்கு மொழிக்குரிய இலக்கணங்களை லலிதா அவர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தித் தமிழில்  பட்டியலிட்டுக் காண்பிக்க முயலுகிறது. தெலுங்கு இலக்கண வரலாற்றை கி.பி.11-க்கு முந்திய இலக்கணங்கள், கி.பி.11-க்குப் பிந்திய இலக்கணங்கள் என வரையறைபடுத்திப் பார்க்கலாம்.
கி.பி.11-க்கு முந்திய இலக்கணங்கள்
            கி.பி.11ஆம் நூற்றாண்டுக்கு முந்திய இலக்கணங்களாக பன்னிரண்டு உள்ளன என்பார் லலிதா (தெலுகு வியாகரண சரித்திரம், 1996). இப்பன்னிரு நூல்கள் எவ்வவ் காலத்தில் எழுதப்பட்டன என்ற குறிப்புகள் இடம்பெறவில்லை. அவை வருமாறு:
1.    கன்வ வியாகரணம் (கன்வன்)
2.    சாரதா தற்பணம் (பிரகசுபதி)
3.    கேமச்சந்திர வியாகரணம் (கேமச்சந்திரன்)
4.    சாகித்திய கௌமதி (புட்பதத்தன்)
5.    இராவணியம் (இராவணன்)
6.    கவிபல்லடக்கிக (கவிபல்லட்டன்)
7.    சோமச்சந்திர வியாகரணம் (சோமச்சந்திரன்)
8.    விக்குருதி வியாகரணம் (அகத்தியர்)
9.    வீரபத்திரியம் (?)
10.  சர்வலட்சண சாசனம்(?)
11.  சத்தானு சாசனம்(ஈசுவரமுனி)
12.  வியாகரணம்(வால்மீகி, தருமராசன், நாகராசு, இந்திரன், கேசன், கௌதமன், பிரபாகரன், சர்வவர்மன், கவிராட்சசன், விட்ணு சர்மா, திருகவி, அரி, சிருங்கார பூடணன், துர்வாகன், கவிசிகாமணி, மிருதுபாசணன், சௌரிகவி, பாகவன்)
கி.பி.11-க்குப் பிந்திய இலக்கணங்கள்
      கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய இலக்கணங்களை சமசுக்கிருதச் சூத்திர இலக்கணங்கள், ஆந்திரசத்தசிந்தாமணிக்கான உரையிலக்கணங்கள், விக்குருதி விவேகத்துக்கான விளக்க இலக்கணங்கள், அப்பகவீய வியாகரணத்துக்கான விளக்க இலக்கணங்கள், கவிசிரோபூசணத்துக்கான விளக்க இலக்கணங்கள், தெலுங்குச் சூத்திர இலக்கணங்கள், தெலுங்கு உரைச்சூத்திர இலக்கணங்கள், பாலவியாகரணத்துக்கான உரைகள், பிரௌட வியாகரணத்துக்கான விளக்க இலக்கணங்கள், ஒருவகை இலக்கணங்கள், மாணவர் (வித்தியார்த்தி) இலக்கணங்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இலக்கணங்கள், உருசிய மொழியில் எழுதப்பட்ட இலக்கணங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கணங்கள்  என வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.
1.   சமசுக்கிருதச் சூத்திர இலக்கணங்கள்
1)    ஆந்திரசத்தசிந்தாமணிநன்னயப்பட்டு(கி.பி.11)
2)    திரிலிங்க சத்த சாசனம்அதர்வணா(கி.பி.13)
3)    விக்குருதி விவேகம்அதோட்சசூடு(கி.பி.13)
4)    அதோட்ச பிக்கிகலுஅதோட்சசூடு(கி.பி.14 - 17)
5)    திரிவிக்கிரம வியாகரணம்திரிவிக்கிரமடு(கி.பி.16 -17)
6)    ஆந்திர வியாகரணம்(சேசுமதி வியாகரணம்) – நிவர்த்தி லேக நிவ்விருத்தி சேசடல கவி(1684 – 1712)
7)    ஆந்திரகௌமதிமண்டலட்சுமி நரசிங்க கவி(கி.பி.18)
8)    திரிலிங்க சத்தானு சாசனம்மண்டலட்சுமி நரசிங்க கவி(கி.பி.18)
9)    வைக்குருத சந்திரிகமஞ்செல்ல வாசுதேவகவி(கி.பி.18)
10) சமசுக்கிருத சூத்திராந்திர வியாகரணம்பரவத்து சின்னயசூரி(1842)
11) கரிகாரிகாவளிசிசுடு கிருட்டிணமூர்த்தி சாத்திரி(1790 -1862))
12) கரிகாரி காவளி சேசர்வசுவம்பாகவதுல ராமமூர்த்தி(கி.பி.18)
13) பாலவியாகரண சேசம்பரவத்து சின்னயசூரி(கி.பி.19)
14) லட்சண கிரந்தம்அஞ்ஞாத கர்த்துருகம்(?)
15) ஆந்திர வியாகரணம் – ?
16) சுப்பிரமணிய பிக்கலுஅல்லமராசு சுப்பிரமணியகவி(?)
2.    ஆந்திரசத்தசிந்தாமணிக்கான உரையிலக்கணங்கள்
1)    பாலசரசுவதீயம்பாலசரசுவதி(கி.பி.17)
2)    அப்பகவீயம்காகுநூரி அப்பகவி(கி.பி.17)
3)    நிருசிங்க பண்டீதீயம்நிருசிங்க பண்டீத்தியடு(?)
4)    கவிசிரோபூசணம்(அகோபலபண்டீதியம்) – அகோபலபதி(கி.பி.18)
5)    வீரபூபாலியம் மாதய்ய மாத்தியடு(கி.பி.18)
6)    சவுருத்தி ஆந்திரசத்தசிந்தாமணிமஞ்செல்ல வாசுதேவகவி(கி.பி.18)
7)    கவிசனாஞ்சனம்கிமூர்த்தி நரசிங்கராசு(கி.பி.19)
8)    ராமகிருட்டிணீயம்அல்லமராசு ராமகிருட்டிண கவி
9)    ஆந்திர வியாகரண தாண்டான்வியம்சுசரல சுப்பிரமணியம்(கி.பி.19)
10) கச்சுத்து வாக்கியானம் – ?(கி.பி.19)
11) கிருட்டிண பூபாலியம்சந்திரகை(கி.பி.19)
12) ஆந்திரசத்தசிந்தாமணி விருத்தி சியோத்துசுனம்சிசண கிருட்டிணமூர்த்தி(கி.பி.19)
13) சடீகாந்திர சத்த சிந்தாமணி – ?(கி.பி.19)
14) ஆந்திரசத்தசிந்தாமனி வியாக்கியலு – ?
15)  உத்தியோதனி – பாரநந்தி ராமசாத்திரி(1923)
16) சிந்தாமணி விசய பரிசோதனம்வச்சல சினசீதா ராமசாத்திரி(1931)
17) சிந்தாமணி நாராயண கிருதயம்சிலுக்கூரி நாராயணராவ்(1937)
18) நாராயநிய ஆந்திர வியாகரணம்சரல நாராயண சாத்திரி(1967)
19) சீதாராம பண்டீதியம் வச்சல சினசீதாராம சாத்திரி(1937)
20) கல்பத்தரு வியாக்கிய(ஆந்திர வியாகரண சங்கீத சர்வசுவமுநந்தலி)  வச்சல சினசீதா ராமசாத்திரி(1951)
21) ஆந்திரசத்தசிந்தாமணி ஆங்கில வாதம்சி.பி.பிரவுன்
22) ஆந்திரசத்தசிந்தாமணி வியாக்கியம்பரவத்து சின்னயசூரி
3.   விக்குருதி விவேகத்துக்கான விளக்க இலக்கணங்கள்
1)    கவிசிரோ பூசணம்திவிதந்திரினி சீதாராமகவி(கி.பி.18)
2)    கவிசன மண்டனம்  ?(கி.பி.18)
3)    நாராயநியாந்திர வியாகரணம் – ?(கி.பி.20)
4)    சீதாராம பண்டீத்திய கல்பத்தரு வியாக்கியம் – ?(கி.பி.20)
4.   அப்பகவீய வியாகரணத்துக்கான விளக்க இலக்கணங்கள்
1)    சுகவி மனோரஞ்சனம்கூசிமஞ்சி வேங்கடராமகவி(1872)
2)    அப்பகவீய விவரணம்வேகுல ராமசாத்திரி(1950)
3)    அப்பகவீய பாவபிரகாசிகராவூரி துரசாமி சர்மா(1966)
5.   கவிசிரோ பூசணத்துக்கான விளக்க இலக்கணங்கள்
1)    அகோபலபண்டீத்திய வியாக்கியம்கொண்டி பத்திராத்திரி ராமசாத்திரி(கி.பி.19)
2)    அகோபல பண்டீத்திய வியாக்கியம்வேதுல ராமசாத்திரி(1904)
3)    அகோபல பண்டீத்திய வியாக்கியம்கோ.வை.கிருஷ்ணமாச்சாரியலு(1904)
4)    அகோபல பண்டீத்திய அனுபாதம்செலமு சரல வங்கச்சாரியலு(1965)
5)    அகோபல பண்டீத்திய அனுபாதம்அமரேசம் ராசேசுவர சர்மா (1965)
6)    கவிசிரோ பூசண விவ்வுருத்திஆகெல்ல அருணாச்சல சாத்திரி(1972)
7)    கவிசிரோ பூசண வியாக்கியானம்ராம்பட்டல லட்சுமி சாத்திரி(கி.20)
6.   தெலுங்குச் சூத்திர இலக்கணங்கள்
1)    ஆந்திரபாசாபூசணம்மூலகடிக கேதனா(கி.பி.13)
2)    ஆந்திர கௌமதிகணபவரபு வேங்கடகவி(கி.பி.17)
3)    கவிசஞ்சன விச்சேதம்அடிதமு சூரகவி(கி.பி.18)
4)    பட்டாபிராம பண்டீதியம் வேதம் பட்டாபிராம சாத்திரி(கி.பி.19)
5)    பத்தியாந்திர வியாகரணம்பரவத்து சின்னயசூரி(கி.பி.19)
6)    ஆந்திர குசுமாவளிவாரணாசி வேங்கடரமகவி(கி.பி.10)
7)    பாலவியாகரண பத்தியானுவாதம்ஓருகண்டி சோமசேகரகவி(கி.பி.20)
8)    பத்தியாந்திர வியாகரணம்மல்லம்பல்லி மல்லிகார்ச்சுன சாத்திரி(கி.பி.20)
9)    தெலுகுராச(சிக்ஷ்ட) வியாகரணம் – பென்மெத்துச சத்திய நாராயன சாத்திரி(1957)
10) ஆந்திரபாசாபூசணம்மரிகண்டி சிங்கராச்சரியலு(கி.பி.16)
11) தெலுகு வியாகரண பத்தியங்கள்மரிகண்டி கோனேடி தேசிகுடு(கி.பி.16)
12) திவ்விய பிரப விவரணம்தேனிநேனி சூரய்யா(1953)
7.   தெலுங்கு உரைச்சூத்திர இலக்கணங்கள்
1)    கவிசனாச்சிரயம்(தோசாதிகாரம்) – வேமலவாட பீமகவி(கி.பி.12)
2)    காவியலங்கார சூடாமணி நவமோல்லாசம்வின்னகோட்ட பெத்தனா(கி.பி.14)
3)    சந்தோதர்பணம்அமா அனந்த மாத்தியா(கி.பி.15)
4)    கவிசிந்தாமணி பாசா லட்சணம் வெல்லங்கி தாதம்பட்டு(கி.பி.15)
5)    லட்சணபார சங்கிரகம்சித்திரகவி பெத்தனா(கி.பி.15)
6)    கவிசன சஞ்சீவனிமுத்தராசு ரமணா (கி.பி.16)
7)    சுலட்சணசாரம்திலிங்கமுகுண்ட திம்மகவி(கி.பி.16)
8)    லட்சணதீபிகவார்த்தாகவி ரகுநாதய்யா(கி.பி.17)
9)    ஆந்திர பிரயோக ரத்தினாகரம்கணபவரபு வேங்கடகவி(கி.பி.16)
10) லட்சணசிரோமணிபொத்தபி வேங்கட ரமணகவி(கி.பி.18)
11) சர்வலட்சண சாரசங்கிரகம்கூச்சி மஞ்சி திம்மகவி(கி.பி.18)
12) சகல லட்சண சாரசங்கிரக சிந்தாமணிஉப்புலூரி வேங்கடரெட்டி(கி.பி.18/19)
13) ஆனந்த ரங்கராட்டுச் சந்தம்கசுத்தூரி ரங்ககவி(கி.பி.19)
14) லட்சண மஞ்சரிநைசதம் திம்மகவி(கி.பி.18)
15) லட்சண நவரத்தினமாலிகசிறுமற்றி நரசிங்க்கவி(கி.பி.19)
16) சர்வ லட்சண சாரம்ரங்கய்யா(?)
17) ஆந்திரகவி பிரயோக ரத்தினாகரம்ராவூரி தொரசாமி சர்மா(கி.பி.20)
18) லட்சண விலாசம்பெனுமர்த்தி வேங்கடாரியடு(?)
19) லட்சண விசயம் – ?
20) லட்சண கிரந்தம் – ?
21) ஆந்திர பிரயோக ரத்தினாகரம்பப்பனகவி(?)
22) கவிணாச்சரிய வியாக்கியானம்டீ. பாசுக்கரராவ்(1969)
23) தீதிதி வியாக்கியம்கோ. வேங்கட கிருட்டிணமாச்சாரியலு(?)
24) தத்துவத்தரிசினி வியாக்கியம்பாசியம் வேங்கட நரசிங்க பாசியகா சாரியலு(?)
25) சுலட்சண சாரதாத்பரியம்  – ?
26) ஆந்திர வியாகரண சங்கிரகம் – ?(கி.பி.19)
27) ஆந்திர சத்தானு சாசனம்பரவத்து சின்னயசூரி(1844)
28) சத்த லட்சண சங்கிரகம்பரவத்து சின்னயசூரி(1853)
29) லகு வியாகரணம்வேதம் வேங்கட ரமணசாத்திரி(1856)
30) பாலவியாகரணம்பரவத்து சின்னயசூரி(கி.பி.1858)
31) ஆந்திர வியாகரணம்(வெங்கய்ய வியாகரணம்) – தடினாட வெங்கய்யா(1862)
32) நரசிங்க வியாகரணம்கள்ளேபல்லி வராக நரசிங்க பட்னாயக்(1872)
33) திரிலிங்க லட்சண சேசம் (பிரௌட வியாகரணம்) – பகுசனபல்லி சீதாராமச் சாரியலு (1885)
34) ஆந்திர சத்த ரத்தினாகரம் – ?(கி.பி.19)
35) சுலப வியாகரணம்வாவிலி கொலுசு சுப்பாராவ்(1905)
36) நரசித்தாந்த சந்திரிகமண்டலட்சுமி காமேச்சுவரகவி(கி.பி.20)
37) ஆந்திர பாசானு சாசனம்(சூரிய நாராயணீயம்) – சூரியநாராயண சாத்திரி(1926)
38) வியவகரிக பாசா வியாகரணம்வட்லமூடி கோபால கிருட்டிணய்யா(1958)
39) முக்த லட்சண கௌமதிவந்தராம் ராமகிருட்டிணராவ்(1974)
8.   பாலவியாகரணத்துக்கான உரைகள்
1)    பாலவியாகரண குப்தார்த பிரகாசிககல்லூரி வேங்கட ராமசாத்திரிலு(1908)
2)    பாலவியாகரண சாரசுவ சர்வசுவ பேடிகதூசிவேங்கட ராமமூர்த்தி சாத்திரி(1936)
3)    லகுடீகபுலுசு வேங்கட ரமணய்யா(1947)
4)    சஞ்சீவனி வியாக்கியம்(ஆந்திர வியாக்கிய சஞ்சித சர்வசுவம்) – வச்சல சினசீதாராம சாத்திரி(1951)
5)    பாலவியாகரணதோத்தியோதம் – ?(1959)
6)    ரமணீயம்துவ்வூரி வேங்கட ரமண சாத்திரி(1964)
7)    பாலவியாகரண கண்டாபத வியாக்கியானம்வந்தராம் ராமக்கிருட்டிணராவ்(1970)
8)    பாலவியகரண விப்புருதிசன்னிதானம் சூரியநாராயண சாத்திரி(1970)
9)    பாலவியாகரண விகாச வியாக்கியம்டாக்டர் பொட்டுப்பல்லி புருசோத்தம்(1977)
9.   பிரௌட வியாகரணத்துக்கான விளக்க இலக்கணங்கள்
1)    குமாரதேவ பண்டீத்தியம்தாள்ளூரி ஆரியகம் பிள்ளை(1947)
2)    சுபோதினி வியாக்கியம்புலுசு வேங்கட ரமணய்யா(1959)
3)    தத்துவபோதினி வியாக்கியானம்பாசியம் வேங்கட நரசிங்க பாசியசாரா சாரியலு(1963)
4)    பாலபிரௌட வியாகரண சர்வசுவம்சுபார்த்தி=(1969 – 1970)
5)    பிரௌட வியாகரண கண்டாபத வியாக்கியனம்வந்தராம் ராமக்கிருட்டிணராவ்(1975)
10. ஒருவகை(ஏகதேச) இலக்கணங்கள்(46)
1)   எழுத்து(வர்ணமாலா) இலக்கணங்கள்
1)    அட்சரகுச்சம்பரவத்து சின்னயசூரி(கி.பி.19)
2)    நவீனாட்சரகுச்சம்பரவத்து சின்னயசூரி(கி.பி.19)
3)    அட்சராப்பியாசம்யன். புருசோத்தம்(1887)
4)    பாலகுனிதம் – யன். பலபதிராவ்(1919)
5)    ஆந்திரட்ரங்கள்பானகண்டி(1928)
6)    அட்சரகுச்சம் – ?
2)   வட்டத்துக்குரிய(அர்த்தானுசுவர - பிந்து) இலக்கணங்கள்
1)    பாலசந்திரோதயம்பகுசனபல்லி சீதாராமச் சாரியலு(1871)
2)    அர்த்தானுசுவர தத்துவம்டி. யம். சேசரி சாத்திரி(1892)
3)    அர்த்தானுசுவர தர்பணம்வேங்கடராம நரசிங்கரவ்(1912)
4)    அர்த்தானுசுவர சகடரேபு சந்திரிகபெனுமத்துச சூரியநாராயணராசு(1927)
3)   தனி () சிறப்பு எழுத்துக்குரிய(ரேபலு) இலக்கணங்கள்
1)    ரேப றகார நிர்ணயம்தாள்ளபாக பெத்திருமலய்யா(கி.பி.16)
2)    ரேப றகார நிர்ணயம்பெத்தபூடி பத்திரன்னா(?)
3)    ரேப றகார தாராவளிகணபவரபு வேங்கடகவி(?)
4)    ஸகட ரேப நிர்ணயம்பாரதம் லட்சுமீபதி(கி.பி.18/19)
5)    ஸகட ரேப லட்சணம்மாமிடி வேங்கடாரியலு(கி.பி.17/19)
6)    ரேப றகார வச்ச பத்தச்ஞா பகலோகோ பகாரம்சி. சி. பிரௌன்(கி.பி.19)
7)    அலகு கௌமதிபகுசனபல்லி சீதாராமச் சாரியலு(1872)
8)    துவி ரேப வர்ண தர்பணம்ஓரிகால ரங்கநாதகவி(1903)
9)    சந்தச்சாத்திரி லட்சண சாரசங்கிரகம்பாபிலோனி வேங்கடசாமி நாயுடு(1860)
10) வையாகரண பரிசாதம்வச்சல சின்சீதாராம சாத்திரி(1937)
4)   தற்சமதற்பவ இலக்கணங்கள்
1)    வைக்கிருத தீபிக – சீதாராமச் சாரியலு(1873)
2)    தத்சம சந்திரிக – சன்னிதானம் சூரிய நாராயண சாத்திரி(1954)
3)    ரூபாந்திர சதகம் – கோகண்டி துர்க்க மல்லிகார்ச்சுன ராவ்(1960)
4)    தத்சம சதகம் – ?(1960)
5)    வையாகரண பாரிசாதம்வச்சல சினசீதாராம சாத்திரி(1937)
5)   வேற்றுமை(விபத்தி) இலக்கணங்கள்
1)    விபத்தி போதினிபரவத்து சின்னயசூரி(1859)
2)    ஆந்திர சத்த சந்திரிகபரவத்து சின்னயசூரி(1930)
3)    விபத்தி சந்திரிகவி. சுப்பாராயடு(1865)
4)    விபத்தி தீபிகமகாகாளி சுப்பராயடு(1890)
5)    விபத்தி தீபிகசரசுவதி வேங்கட சுப்பராம சாத்திரி(1902)
6)   பால்(லிங்கவசன) இலக்கணங்கள்
1)    லிங்கபேத சதகம் வசனபேதசோசம் – கோகண்டி துர்க்க மல்லிகார்ச்சுன ராவு(1971)
7)   தேசியச்சொல்(சத்தாதிதேச) இலக்கணங்கள்
1)    ஆந்திரசத்த மஞ்சரிபகுசனபல்லி சீதாராமாச் சாரியலு(1885)
2)    கர்தா, கர்மா, கிரியா போதினிமகாகாளிசுப்பிராயடு(1896)
3)    பாசாபாக பிரதீபிகமகாகாளிசுப்பிராயடு(1896)
4)    சத்த லட்சணம்சிருங்காரகவி(1903)
5)    கர்தா, கர்மா, கிரியா போதினி. தேவராசு(1909)
6)    கர்தா, கர்மா, கிரியா போதினிகுண்டுராகவ தீட்சிதலு(1929)
8)   வினையடி(தாது) இலக்கணங்கள்
1)    ஆந்திர தாதுபாடம்பட்டபிராம சாத்திரி(1816)
2)    ஆந்திர தாதுமாலாபரவத்து சின்னயசூரி(1898)
3)    ஆச்சிக கிருதந்த மஞ்சரிதச்சூரு சிங்காரச் சாரியலு(1874)
4)    ஆந்திர சத்த தத்பவம்டீ. யம். சேசகிரி சாத்திரி(1896)
5)    ஆந்திரதாதுமாலாபாடி வெங்கட நாராயண சாத்திரி(1946)
9)   ஒருவகை யாப்பு(ஏக காவிய) இலக்கணங்கள்
1)    பிராசின சத்தானு சாசன கிரமம்மானவல்லி ராமக்கிருட்டினகவி(1972)
10)இலக்கண அகராதி(வியாகரண கோசம்)
1)    பாலவியாகரண சஞ்ஞா சந்திரிககூடபாடி கிருட்டிணகுமாரி(1974)
11. மாணவர்(வித்தியார்த்தி) இலக்கணங்கள்
1)    வியாகரணம்சூலூரி அப்பய்ய சாத்திரி(1810)
2)    ஆந்திர லட்சண வெங்கய்யார்ய வியாகரணம்மாமிடி வெங்கய்யா(1764 – 1834)
3)    தெலுகு வியாகரணம்(ராவிபாடி குருமூர்த்தி சாத்திரி வியாகரணம்) – ராவிபாடி குருமூர்த்தி சாத்திரி(1836)
4)    தெலுகு வியாகரன சங்கிரகம்(சேசய்ய வியாகரணம்) – உபயகிரி சேசய்யா(1857)
5)    ஆந்திர வியாகரண சந்திரிகநகராள்வார்தாசு(1859)
6)    A short Grammar of the Telugu Language – மத்தாலி லட்சுமி நரசய்யா(1860)
7)    ஆந்திர வியாகரண சங்கிரகம்(அப்பாய நாயுடு வியாகரணம்) – பாபிலோனி அப்பாய நாயுடு(1868)
8)    The Elements of Telugu Grammar – பி. சி. சௌந்திரநாய்கம் பிள்ளை(1870)
9)    சங்கிரக வியாகரணம்கந்துகூரி வீரசேலிங்கம் பந்துலு(1872)
10) நவியாந்திர வியாகரணம்கந்துகூரி வீரசேலிங்கம் பந்துலு(?)
11) தெலுகு வியாகரணம்(பாலவியாகரணம்) – நரகரி கோபால கிருட்டிண செட்டி(1874)
12) பாலபோத வியாகரணம்விதுவி ரங்கம்மா(1874)
13) ஆந்திர வியாகரன சங்கிரக பாகம் – ?(1876)
14) சர்வ லட்சண சாரசங்கிரகம் (குப்ப நய்யங்கிரி வியாகரணம்) – சேசுடலூரு குப்ப நய்யங்கார்(1878)
15) அசுபோத லட்சண சங்கிரகம்டி. ஆஞ்சநேய சாத்திரி(1884)
16) சிசு வியாகரணம்வேதம் வெங்கடராம சாத்திரி(1886)
17) ஆந்திர வியாகரண பீடிகசகந்நாததாசு திருமல செட்டி(1889)
18) ஆந்திர வியாகரணம்சிருங்காரகவி வெங்கடராமய்யா(18900
19) தெலுகு வியாகரண சங்கிரகம் – ?(1891)
20) தெலுகு வியாகரண சங்கிரகம்கெ. ரங்கய்யா(1896)
21) ஆந்திர வியாகரணம்பேதபூடி பிரகாசம்(1897)
22) மாத்தியமிக தெலுகு வியாகரணம்ஈசுவரப்ப புத்திராசு(1899)
23) சந்தச்சு சத்திரம்செ. அனுமந்தராவ்(1863)
24) ஆந்திர வியாகரணசாரம்கோபல்லி வேங்கரமணராவ்(1904)
25) ஆந்திர வியாகரணம்சி. குன்னஆ(1907)
26) வித்தியாதீபிகபென்னய்யா கோல்(1909)
27) வியாகரண பிரவேசம்புலுசு பாபய்ய சாத்திரி(1914)
28) வியாகரண சந்திரிகபி. சேசசல சாத்திரி(1917)
29) மார்கோப தேசிகம்(1) – வச்சல சினசீதாராம சாத்திரி(1918)
30) சரசுவதி வியாகரணம்கொலிசின பெண்டரீகம் (1920)
31) உபன்னியாச மஞ்சரிநந்திராசு சலபதிராவ்(1920)
32) ஆந்திர வியாகரண சர்வசுவம்நெலடூரி பார்த்தசாரதி அய்யங்கார்(1921)
33) ஆந்திர பாசா லட்சண சிட்சணம்பூதலபட்டு =ராமுலுரெட்டி(1924)
34) ஆந்திர வியாகரணம்பெதகாட கங்கய்யா(1927)
35) ஆந்திர பாசா போதினிஈபாசியகா சாரியலு(1927)
36) மார்கோப தேசிகம்(2) – வச்சல சினசீதாராம சாத்திரி(1928)
37) சாரதா வியாகரணம் தேமல்ல ராசகோபாலராவ்(1930)
38) கவித்துவ சிந்தாமணி – சதல வாடகோடி நரசிங்கம்(1930)
39) வியாகரண போதினி – பிரதாபராம கோடய்யா(1934)
40) வியாகரண போதினி – திரிபூராரி பட்டலு வீரராகவய்யா(1935)
41) ஆனந்த வியாகரணம் – புலுசு வேங்கட ரமணய்யா(1946)
42) ஆந்திர வியாகரண சர்வசுவம் – சேசாத்திரி ரமணகவுலு(1947)
43) விசயாந்திர வியாகரணம் – பண்டித சத்திய நாராயணராசு, பேரி சூரிய நாராயணம்(1950)
44) ஆந்திர வியாகரணம் – சொன்னல கட்ட நாராயண சாத்திரி(1953)
45) சுபோத வியாகரணம் – புலுசு வேங்கட ரமணய்யா(1955)
46) ஆந்திர ல்ட்சன சங்கிரகம் – ராவூரி தொரசாமி சர்மா(1957)
47) வித்தியார்த்தி கல்பத்தரு – முசுநூரி வேங்கட சாத்திரி(1964)
48) லட்சண பூர்ணிமா – சுரூர்த்தி=(1971)
49) பாலவியாகரணம் – பேரி சத்திய நாராயண சாத்திரி(1971)
50) ஆந்திர லட்சண சாரம் – சிலுகூரி பாபய்ய சாத்திரி(?)
51) ஆந்திர லட்சண ரத்தினாகரம் – செலம் செரல ரங்காச்சாரியலு(?)
52) ஆந்திர வியாகரண விவரணம் – கப்ப கந்துல லட்சுமண சாத்திரி(?)
53) பிரசநோத்திர ஆந்திர வியாகரணம்(பிரசநோத்திர ரத்தின மாலா) – புதூரி சீதாராம சாத்திரி(1834)
54) சரள வியாகரணம் – ?
55) பிரசநோத்திர தீபகம் – சிருங்காரகவி சர்வாராமுடு(1899)
56) பிரசநோத்திர வியாகரணம் – சி. ரங்கய்யா(1900)
57) பிரசநோத்திர வியாகரணம் – என். வேங்கட அப்ப சாத்திரிலு(?)
58) தெலுகு வியாகரண பிரசநோத்திரமுலு – நுதுருபாடி கங்காதர சாத்திரி(?)
59) ஆந்திரவியாகரண சாரம்(பிரசநோத்திரமுல நுண்டி சூத்திரமுல ராபுட்டுடு) – ஆகெள்ள சேசாத்திரி ஓருகண்டி நீலகண்டி சாத்திரி
12. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  இலக்கணங்கள்
1)    Father Beschi’s Grammar – Father Beschi (1907)
2)    Warugian Grammar & Grammatica Telugica(Latin) – Benjamin Schulze(1728)
3)    A Grammar of Gentoo Language –? (1807)
4)    A Grammar of Telinga Language – William Carey (1814)
5)    A Grammar of Teloogoo Language – A.D. Campbell (1816)
6)    A Grammar of Gentoo Language – Willam Brown (1807)
7)    Teloogoo selections with Translation and Grammatical Analysis – J.C. Morris
8)    Compendium of the Andhra Vyakaranamu or a catechism of the Teloogoo Grammar – W.M. Howell (1834)
9)    A Grammar of Telugu Language – C.P. Brown (1840)
10) Grammatical Analysis of the words in the first chapter of the Telugu Reader – C.P. Brown (1854)
11) An Abridgement of Telugu Grammar – A. Riccaz (1869)
12) A Progressive Grammar of Telugu Language – A. H. Arden (1873)
13) Simplified Grammar of the Telugu Language – Morris Henry (1890)
14) A manual of Telugu Grammar and Phonetics – ? (1918)
15) An introduction to Telugu Grammar – Alfred Master (1947)
13. உருசிய(Russia) மொழியில் எழுதப்பட்ட இலக்கணங்கள்
1)    Telugu Language – Z. Petrunicheva (1960)
2)    Kratky Grummatichesky ocherk yazyka Telugu (A short Telugu reference Grammar) – Svetlana Dzenith and Nikita Gurov (1972)
14. ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கணங்கள்
1)    ஆந்திரசத்தசிந்தாமணி – சி.பி.பிரவுன்(பதிப்பிக்கப்படவில்லை)
2)    பாலவியாகரணம் – பி.எஸ். சுப்பிரமணியன்(2002)
3)    ஆந்திரபாசாபூசணம் – உஷாதேவி(2009)
துணைநின்றவை
 தமிழ்
1.    அகத்தியலிங்கம் ச., 2005, திராவிட மொழிகள் -1, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2.    அறவேந்தன் இரா., 2008, சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.
3.    கிரிபிரகாசு டி.எஸ்., ஆனந்தகுமார் பா., 1987, தெலுங்கு இலக்கிய வரலாறு, பார்த்திபன் பதிப்பகம், மதுரை.
தெலுங்கு
4.    லலிதா ஜி., 1996, தெலுங்கு இலக்கண வரலாறு, வெலகபூடி பதிப்பகம், சென்னை.
இணையம்

நன்றி: கீற்று இணைய இதழ்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன