சொல்லாய்வுகள்


வேந்துதொழில், வேந்துறுதொழில், வேந்துவிடுதொழில்: கருத்தியல்

-       சத்தியராஜ்
            வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில் ஆகிய மூன்று சொல்லாட்சிகள் சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றனஅம்மூன்றும் வினை அடிப்படையில் நுண்ணிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளனஅவ்வேறுபாடுகளைத் தொல்காப்பியம்சங்கப்பாடல்கல்வழிக் கண்டறிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியத்தில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில்:
            தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வேந்தற்குரிய தொழில்கள் தொடர்பான சொல்லாட்சிகளைக் கொண்டிலங்கும் நூற்பாக்கள் உள்ளனஅந்நூற்பாக்களில் வரும் வேந்தன் தொழில் தொடர்பான சொல்லாட்சிகளைப் பின்வருமாறு பகுத்து விளக்க இயலும்அவையாவன,
·         வேந்துதொழில்
·         வேந்துறுதொழில்
·         வேந்துவிடுதொழில்
வேந்துதொழில்:
            வேந்துதொழில் என்பதைச் சுட்டும் நூற்பா அகத்திணையியலில் பிரிவை உணர்த்துவதாக அமைந்துள்ளதுஅந்நூற்பா வருமாறு:
            வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
            ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே                        – தொல்.பொருள்.34
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர்வேந்தனது வினை இயற்கையாகிய தூது வேந்தனை ஒழிந்த வணிகருக்கும் வேளாளருக்கும் ஆகுமிடன் உடைத்து என்றும், வேந்தனது வினை என்பது வேந்தற்குரிய வினை என்றும் சுட்டியுள்ளார். வேந்து வினை என்பதில், வினை என்பது செயலைக் குறிக்கும். அச்செயல் ஓதல், வேட்டல், படைவழங்கல், குடியோம்பல் என்பதாகும். ஆதலின், வேந்து வினையை வேந்துதொழில் என்று சுட்டுவதே மரபாக உள்ளது.
வேந்துறுதொழில்:
            தூது, காவல் காரணமாகப் பிரியும் காலத்தில் வேந்துறுதொழிலானது நிகழும் என்பது இளம்பூரணர் கருத்து. இதனை,
            வேந்துறு தொழிலே யாண்டினது அகமே               – தொல்.பொருள்.187
என்பது சுட்டும். இந்நூற்பாவிற்கு வேந்தற்குற்றவழிதூது காவல் என அவ்வழிப்பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு என்று பொருள் கூறுவர் இளம்பூரணர்அதாவது போர்தூதுநாடுகாவல்  ஆகிய பிரிவுகள் ஓர் ஆண்டுக்குட்பட்டவை என்பர் தமிழண்ணல்அப்பிரிவின் போது மட்டும் வெந்தனுக்கு உதவும் வினை நிகழும்.
வேந்துவிடுதொழில்:
            வேந்துவிடு தொழிலைச் சுட்டும் நூற்பாக்கள் இரண்டுஅவை வருமாறு:
            வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
            ஆதந்து ஓம்பல் மேவற் றாகும் – தொல்பொருள்.60
            வேந்துவிடு தொழீன் படையும் கண்ணியும்
            வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே – தொல்பொருள்.626
இவைவேந்தனால் ஏவப்பட்ட தொழில் காரணமாகக் காவலர்கள் செல்லும் செலவைக் குறிப்பதாக அமைந்துள்ளனஇளம்பூரணர்தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தருக்கும் உளதாகுமென்றவாறு என்று கூறுவர்இவற்றால் வேந்து வினை என்பது வேந்தற்கு உரிய வினையையும்வேந்துறுதொழில் என்பது தூது கவல் காரணமாக வேந்தற்குற்றவழி உதவும் வினையையும்வேந்துவிடுதொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட காவலருக்குரிய தொழிலையும் குறிக்கும் என்பது பெறப்படும்.
சங்கப்பாடல்கலில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில்:
             சங்கப்பாடல்கலில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில் ஆகிய மூன்றும் குறிக்கப் பெற்றுள்ளனஅவை ஆறு இடங்களில் அமைந்துள்ளனஅவறிற்கான விளக்கங்கள் வருமாறு:
·         வேந்தற்குரிய வினை
·         வேந்தற்குற்றுழி உதவும் வினை
·         வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை
வேந்தற்குரிய வினை:
            வேந்துதொழில் என்னும் சொல்லாட்சி சங்கப்பாடல்களில் மூன்று இடங்களில் காணப்பெறுகிறதுஅதற்கான பாடலடிகள் வருமாறு:
            மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே   – ஐங். 443:1
          ஏந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென      – ஐங். 498:2
          வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு           – புறம். 498:7
இம்மூன்று பாடலடிகளும் வேந்தனது தொழிலையே குறித்துநின்றனசான்றாகபொ.வே.சோமசுந்தரனார்ஔவை சுதுரைசாமிப்பிள்ளை ஆகியோர்நம் மன்னவன் தான் மேற்கொண்டுள்ள இப்போர்த் தொழிலைக் கைவிடுவனாயின் என்பர்இப்பொருண்மை மன்னன் மேற்கொள்ளும் வினையைக் குறித்தது.
வேந்தற்குற்றுழி உதவும் வினை:
            அகநானூறு 254ஆம் பாடலில் மட்டும் வேந்துறுதொழில் குறிக்கப்பெற்றுள்ளதுஅப்பாடலடி வருமாறு:
            வேந்துறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி            – அகம். 254:10
இவ்வடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார்கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளை ஆகியோர் வேந்தற்கு உற்றுழி உதவும் வினையினால் இவ்வேற்று நாட்டின்கண் வந்து தங்கி என்று பொருள் குறிக்கின்றனர்இவ்வுரையைத் தழுவியே பின்வந்த உரைகார்ரும் உரைத்துள்ளனர்இவற்றுள் உற்றுழி என்பதற்கு துன்புறு கலத்தில் இடையூறுகவலிசேதம்தீமைதுன்பம் விளவித்தல்வெட்டல் முதலிய காரணங்களினால் உடம்பில் வரும் காயம்அடைந்த காலம்ஊறுபாடுற்ற காலம் என்பதாகத் தமிழ் அகராதியும்தமிழ்ச்சொல் அகராதியும் பொருள் குறிக்கின்றனஇதனடிப்படையில் வேந்தற்கு உற்றுழி என்பதற்குவேந்தனுக்குத் துன்பம் நிகழும் கலத்தில் உதவக்கூடிய பிறரது வினையைக் குறிக்கும் எனலாம்.
வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை:
            சங்கப்பாடல்களில் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் இரு இடங்களில் வேந்துவிடுதொழில் காணப்பெறுகின்றது.
            வேந்துவிடு தொழிலொடு செலினும்   – குறுந். 242:2
          வேந்துவிடு தொழிலொடு சென்றனன்          – புறம். 319:13
என்ற இவ்விரு பாடலடிகளும் வேந்தனால் ஏவப்பட்டத் தொழிலைக் குறித்தே நிற்கின்றன. இதனை, வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும் என்று உ.வே.சா. சுட்டியுள்ளார். மேலும் புறநானூற்றடிக்கு பகை மேற்சென்றனன் என உ.வே.சா.வும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளையும் சுட்டியுள்ளனர். இப்பொருண்மைகளும் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலுக்குக் கவலர் செல்வதைக் குறித்து நிற்கின்றன என்பதை அறியலாம்.
கருத்தியல்:
            மேற்கண்ட தொல்காப்பியம், சங்கப்பாடல் கருத்துகளைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்ட இயலும்.
பொருண்மைகள்
தொல்காப்பியம்
சங்கப்பாடல்
குறுந்.
ஐங்.
அகம்.
புறம்.
வேந்துதொழில்
வேந்தற்குரிய வினை (பொருள்.34)
-
வேந்தன் தான் மேற்கொண்டுள்ள வினை(443:5, 498:2)
-
அரசன் தனகுரிய அரசியற் தொழில் (285:7)
வேந்துறு
தொழில்
தூது, காவல் காரணமாக வேந்தற்குற்றவழி (பொருள்.187)
-
-
வேந்தற்குற்றுழி உதவும் வினை (254:10)
-
வேந்துவிடு
தொழில்
வேந்தரால் ஏவப்பட்ட வினை (பொருள். 60, 626)
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (242:2)
-
-
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (319:13)

இவ்வட்டவணைவழி வேந்துதொழில், வேந்துறுதொழில், வேந்துவிடுதொழில் என்பதற்கான நுண்ணிய வேறுபாடுகளை அறியமுடியும். வேந்து, வேந்துறு, வேந்துவிடு ஆகியன ஒரெ பொருண்மையைத் தருவனபோல் அமைந்தாலும், வெவ்வேறு பொருண்மைகளையே கொண்டிலங்குகின்றன.
தொகுப்புரை:
·         வேந்துதொழில் என்பது வெந்தனெ மேற்கொள்ளும் தொழிலைக் குறிப்பது.
·         வேந்துறுதொழில் என்பது போர், தூது, நாடுகாவல் காரணமாக மேற்கொள்ளுவோர் தொழிலைச் சுட்டுவது.
·         வேந்துவிடுதொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட போர்த்தொழிலைக் கொள்ளும் காவலருக்குரியது.
(இக்கட்டுரை சூன் 5, 2010 அன்று சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்றப் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றதும், அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றதுமாகும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன