தமிழ்ப் புலவர்

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்னஎன்பதையும்அக்காலத்தில் தமிழ்ச்சூழல்தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும்,விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

சங்கப் புலவர்கள்
            தமிழின் புகழுக்குக் காரணமாக அமைவது சங்க இலக்கியங்கள். இத்தகைய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் பலர் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது இராசுவின் ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
            பெருந்தலைச் சாத்தனார்அந்தியிளங்கீரனார்பொன்முடியார்காக்கைப்பாடினியார்,ஓரோடகத்துக் கந்தரத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் ஈரோடு மாவட்டத்துப் பெருந்தலையூர், அந்தியூர், மொம்முடிஉலகடம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என ஆய்வாளர் கூறுவர் (ஈ.மா.வ. ப:188).
பக்திநெறியும் தமிழ் வளர்ச்சியும்
            தமிழ் மொழியும்பக்திநெறியும் இரண்டறக் கலந்தவை.  தமிழ் மொழியை பக்தி மொழி என்று அழைப்பர்தமிழ் வளர்ச்சிக்கும்தமிழின் பெருமைக்கும் புகழுக்கும் சான்றாக விளங்குவன பக்தி இலக்கியங்கள். அந்தவகையில் சிறந்த பக்தி நெறியோடு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிந்துள்ளது ஈரோடு மாவட்டம் என்பதைப் புலவர் செ.இராசு வரலாற்று ஆய்வின் மூலம் சான்றுடன் விளக்கமளித்துள்ளார்.
            தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிக் கொடுமுடியும்பவானியும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன.  திருஞானசம்பந்தர் பாவனிக்கும்திருநாவுக்கரசர், சுந்தர்ர் முதலிய மூவரும் பாண்டிக் கொடுமுடிக்கும் தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். தாராபுரம்பெருந்துறைபூந்துறை போன்ற தேவார வைப்புத் தலங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன (ஈ.மா.வ.ப.188).
மாணிக்கவாசகர் தம் அகவல் பாடலில் அரிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே என்று பாடியுள்ளார் இதில் பாண்டி வெள்ளமே என்பது கொடுமுடியைக் குறிக்கும் என்று இராசு அவர்கள் சுட்டியுள்ளார்.
இலக்கண வளர்ச்சி
            ஒரு மொழி தடம் புரலாமல் காப்பது அம்மொழியில் அமைந்த இலக்கணங்களேயாகும். அந்தவகையில் தமிழ்மொழிக்குப் பல இலக்கணநூல்களைத் தந்தவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இராசு அவர்கள் பல சான்றாதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
            எழுத்துசொல் இலக்கணம் கூறும் நன்னூலை சீயகங்கன் கேட்டுக் கொள்ள இயற்றிய பவனந்தி முனிவர் பெருந்துறை வட்டம் சீனாபுரத்தைச் சேர்ந்தவர்சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றிய அடியார்க்கு நல்லாரும் விசயமங்கலத்தையும் அருகில் உள்ள நிரம்பையையும் சேர்ந்தவர்கள்.  நன்னூலுக்கு முதல் உரை எழுதிய மயிலைநாதர் ஈரோட்டை சார்ந்தவர் (ஈ.மா.வ.ப.189) என்பது இராசு அவர்களின் ஆய்வுரை வழி அறியமுடிகின்றது.
நிகண்டுகள்
            ஈரோடு மாவட்டத்தில் நிகண்டு நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளமை பற்றி இராசு சுட்டியுள்ளார். காங்கயம் வட்டக் காடையூர்க்காங்கேயன் உரிச்சொல் நிகண்டு இயற்றியுள்ளார்.  காங்கேயன்உரிச்சொல் நிகண்டு என்றே அந்நூல் பெயர் பெற்றது என்றும் காங்கேயத்தில் வாழ்ந்த பள்ளித் தனிக்கையாளர் சிவன்பிள்ளை என்பவர் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசிரிய நிகண்டு அச்சிட்டார் என்ற செய்தியும் அறியமுடிகின்றது.
ஈரோடு மாவட்டத் தற்கால புலவர்கள்
            சாகித்திய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன்புலவர் செ.இராசுபுலவர் இரா.வடிவேலு,டாக்டர் வெ.ஜீவானந்தம்ஸ்டாலின் குணசேகரன்மு.சதாசிவம்சேலம்பாலன்குறிஞ்சி சண்முக சுந்தரம்,நாமக்கல் நாதன்சந்திரசேகரன்தாராபுரம் க.அரங்கசாமிதமிழ்க்குமரன்பெருந்துறைவேலன்சந்திர மனோகரன்செ.சு.பழனிசாமிக.ஆ.திருஞானசம்பந்தம்கு.ஜமால் முகமதுகே.வி. சுப்பிரமணியம்,மே.து.ராசுகுமார் பவானி மழைமகன்ஆற்றலரசு ஆகிய ஈரோடு மாவட்டத்துக்காரர்கள் பலர் பல்வேறு துறைகளில் தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றனர்.  புலவர் செ.இராசு கல்வெட்டுசெப்பேடுசுவடி ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர்.
            ஈரோடு மாவட்டத்தில் வாரமாதம்பருவ இதழ்களாக வெளிவந்தவைவெளிவருபவை மொத்தம் எழுபது என்று பட்டியலிடுகிறார் புலவர் இராசு (ஈ.மா.வ.ப:194) இவற்றின் மூலம் தமிழும்தமிழ் இனமும் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.
முடிப்பு
            செப்பேடுகல்வெட்டு ஆகியவற்றைக் கண்டறிந்தும்வரலாற்று நூல்கள் பலவற்றை உருவாக்கியும் அவற்றின் மூலம் தமிழையும்தமிழரின் தொன்மையையும் உலகறியச் செய்தவர் புலவர் செ.இராசு. ஈரோடு மாவட்டத்தின் மூலம் தமிழ் வளர்ந்தநிலை இராசு அவர்களின் கழன உழைப்பாலும்சிறந்த ஆய்வுக் கூர்மையாலும் வெளிக்காட்டியுள்ளார். இவற்றின் மூலம் தமிழ் இலக்கணஇலக்கிய வளமைக்கு ஈரோடு மாவட்ட புலவர்களின் பங்களிப்பை அறிந்துகொள்ளமுடிகின்றது.  ஈரோடு மாவட்டத்தின் பல்வேறுபட்ட சூழல்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் மூலம் தமிழ்வளர்ச்சி பற்றியும்தமிழ்ச் சிறப்படைந்ததைப் பற்றியும் சிறப்பாகச் சொல்லி மகிழ்ந்துள்ளார் புலவர் செ.இராசு. தமிழ் மொழிதமிழ் இனம்தமிழரின் தொன்மை,தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றில் அக்கறைகொண்டு அவை பற்றியே சிந்தித்துத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பினை உலகறியச் செய்தவர் புலவர் செ.இராசு அவரின் புகழ் என்றும் மங்கா கல்வெட்டாகும்.
ஆய்வுக்கு உதவிய நூல்
செ.இராசு (2008), ஈரோடு மாவட்ட வரலாறுகொங்கு ஆய்வு மையம்ஈரோடு-11.
அ.சத்பதி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 10
கைபேசி : 9865030071
sathpathi30071@yahoo.com

ஆறுமுகநாவலர்

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும் 
உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியதுஇந்நூற்றாண்டில்  அரசியலாரும்கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும்பாடசாலைகளையும் நிறுவினர்ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர்சென்னைக் கல்விச்சங்கம் (Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும்உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.                             இந்திய நாட்டை அப்போது ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியார் இலக்கண நூல்களைஎளிய உரைநடையில் எழுதி வெளியிடுவோர்க்குப் பரிசளிப்பதாகக் கூறவே தமிழில் பல இலக்கண நூல்கள் உரை நடையில் வெளிவந்தனஇந்நூற்றாண்டில் நாடு முழுவதும் அச்சுக்கூடங்களை நிறுவிஎண்ணற்ற உரைநடை நூல்களை இயற்றி அச்சிட்டனர்குறிப்பாக ‘மிஷன்’ என்னும் கிறித்துவ சங்கங்கள் மதசார்பான உரைநடை நூல்களை ஏராளமாக அச்சிட்டுக் குறைந்த விலைக்குக் கொடுத்தனர்இவ்வாறாக உரைநடை வளர்ச்சி மேலோங்கியது.  இவ்வளர்சிக்கு வித்திட்டவர் ஆறுமுகநாவலர்அவர் குறித்த தகவலைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பிறப்பும் கல்வியும்
  யாழ்பாணத்து நல்லூரில் சைவ வேளாளர் குலத்தில் 18.2.1822 அன்று பிறந்தவர் ஆறுமுகநாவலர்புலவர் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார் இவரின் பெற்றோர்கள் ஆவர்இவருக்கு ஆங்கில அறிவும்தமிழ்ப்புலமையும் இளமையிலே கைவரப் பெற்றனபள்ளிப்படிப்பினை யாழ்ப்பாணத்தில் கற்றார்மெத்தடிஸ்ட் மிசன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்
தமிழ்நாடும் இலங்கையும் அரசியல்மொழிசமுதாயம்பண்பாட்டுத்தொடர்பு கொண்டு காணப்பட்டிருந்த காலமாகத் திகழ்ந்ததுதமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டிருந்த பெரியோர் பலரை இலங்கை ஈன்றெடுத்திருக்கிறதுபல்வேறு துறைகளில் மனிதர்கள் தமிழ்பற்றுள்ளவராக இருந்துள்ளனர்அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுகநாவலர் ஆவார்.
            சைவமும், தமிழும் தம் இரு கண்களாகக் கொண்டு விளங்கினார்.இவ்விரண்டினை வளர்ப்பதற்கு யாழ்பாணத்திலும்சிதம்பரத்திலும் கல்லூரிகளை நிறுவினார். “அவற்றிக்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத்தமிழ்த் தொண்டு செய்த சான்றோர் அவர்” என்று டாக்டர் மு.குறிப்பிடுகிறார்கிறித்துவ சமயம் வளர்ந்து பரவி வந்த காலத்தில் பழைய சமயமான சைவ சமயத்திற்கு புத்துயிர் அளித்தார்தம் 19ஆம் வயதில் இருமொழிக் கற்பிக்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார்தூய தமிழில் பரிசுத்த வேதகாகம( Bible) நூலை மொழிபெயர்க்கத் துணைபுரிந்தார்.
            சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்க ஆர்வம் கொண்டது மட்டுமின்றி சமயத்தை பரப்பவும் பெரிதும் முயன்றார்அதற்காகவே பற்பல நூல்களை எழுதிவெளியிட்டார்ஆறுமுக நாவலருக்கு 27 வயது ஆகும் பொழுது ’ நாவலர்’ என்ற பட்டத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தார் வழங்கி அவரை சிறப்பித்தனர்.                                                       
வள்ளலாரின் பாடல்களை ‘அருட்பா’ என வாதிட்டவர்சைவ சமயத்தில் கொண்ட  ஊன்றிய பற்றே வள்ளலார் பாடல்களை ஏற்கத் தயங்கியதுஅவரிடம் கல்வி கற்ற மாணவர்களிலே ‘சபாபதி நாவலர்’ என்பவர் தலைசிறந்தவர் ஆவார்சமய நூல்களை இயற்றுவதோடு மட்டுமின்றி சிறுவர்களுக்குப் பாடப்புத்தகங்களையும் எழுதினார்.
சிறப்புப்பெயர்கள்
பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளதால் இவரை அறிஞர் வி.கோ.சூரியநாரயண சாஸ்திரியார் வசனநடை கைவந்த வள்ளலார் எனப் பாரட்டியுள்ளார். ‘வைதாலும் வழுவின்றி வைவாரே’ என்ற பாராட்டுரையும் இவர் குறித்து எழுந்ததே ஆகும்ஆங்கில உரைநடைக்கு டிரைன்(  Dryden ) போலத் தமிழுக்கு ஆறுமுகநாவலர் எனும் சிறப்பினைப் பெற்றவர்.  இவரை,                         
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற்
  சொல்லுதமி  ழங்கே  சுருதி    எங்கே?
என திரு சி.வை.தாமோதிரம்பிள்ளை பாரட்டியுள்ளார்.
            தமிழ் காவலர்தமிழ் உரைநடையின் தந்தைநாவண்மை படைத்த பேச்சாளர்உரைநடை வேந்தர்பதிப்பாசிரியர்சைவ தந்த தண்ணளியாளர் ஐந்தாம் சமயக்குரவர் எனப் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டுள்ளார்பெர்சிவில் என்னும் கிறித்துவ பாதிரியார் இவரிடம் தமிழ் படித்தார் என்பது இவரின் புலமையின் சிறப்பாகும்இலக்கண வழுவில்லாத தூய்மையன எளிய நடையே முதன்முதலில் கையாண்டவர் இவரே.
ஆற்றியத் தொண்டுகள்:
Ø  இயற்றிய நூல் - 23
Ø  உரை நூல் - 8
Ø  அச்சுப் பதிப்பு - 39
Ø  பாடல் வகைகள் - 14
v  சென்னையில் ஓர் அச்சகத்தை நிறுவி சைவ வினா விடை சைவ சமய நெறி உரைதிருமுருகாற்றுப்படையுரை போன்ற சமய நூல்களை வெளியிட்டுள்ளார்.
v  ஆங்காங்கேச சென்று சமயச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
v  பாரதம்பெரியபுராணம்,கந்தபுராணம்,சிற்றுரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்துள்ளார்.
v  நன்னூல் காண்டிகையுரைஇலக்கணக் கொத்துஇலக்கணச்சூறாவளி போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
v  சைவ பிரகாச வித்தியா சாலை (ஆறுமுக நாவலர் உயர்நிலைப் பள்ளி என செயல்படுகிறது).                வண்ணார்,  பண்ணைஜோப்பாய்கொழுப்புத்துறைபருத்தித்துறைஏழாலை,  முல்லைத்தீவு,  யாழ்ப்பாணம் எனும் இடங்களில் நடத்தினர்.
v  நல்லூரின் வித்யானு பாலன யந்திர சாலை 1848 தொடங்கப்பட்டது
v  வண்ணாரப் பண்ணையில் சைவ ஆங்கில வித்யாசாலை தொடங்கினார்.
v  சிதம்பரம் - சைவ பிரகாச வித்தியா சாலை தொடங்கினார்.
v  1, 2, 3, 4, ஆம் வகுப்புகளுக்குரிய பல பாடங்களைச் சிறப்பாக அச்சாக்கி வெளியிட்டுள்ளார்.
v  கீர்த்தனைங்கள்பாடல்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.
v  கணித வாய்பாடுகளை வெளியிட்டுள்ளார்.
v  திருவிளையாடற் புராண வசனம்பெரியபுராண வசனம் ஆகியவற்றை சிறப்பாக அச்சாக்கி வெளியிட்டுள்ளார்.
v  யாழ்பாணத்துச் செல்வர்களும் திருவாடுதுறை மடம் தலைவரும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் போன்றோரின் உதவியால் 39 நூல்களை பனை ஏட்டிலிருந்து நூல்வடிவில் அச்சிட்டுள்ளார்.
v  பாலவந்தம் சமீந்தார் பொன்னுச்சாமித்தேவர் (பாண்டி துரை தேவரின் தந்தைஉதவியால் திருக்குறள் பரிமேலழகர் உரையே 1861-ல் அச்சிட்டுள்ளார்.
v  போலிமருட்பாமறுப்புகந்தபுராண வசனம் போன்ற உரைநடைகளை இயற்றியுள்ளார்.
v  சைவ தூக்ஷ்ண பரிகாரம்வச்சிர தாண்டம் போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.
v  தமிழ் மாணவர்களுக்காக சைவ படலம்இலக்கணச் சுருக்கம்இலக்கண வினா விடைசைவ வினா விடைசூசனம்சிவாலாய தரிசன விதிஅனுட்டான விதிபெரிய புராண வசனம்சிதம்பர மான்மியம்இலங்கை  பூமி சரித்தரம்சேது புராணம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
v  சூடாமணி உரை(முதன்முதலில் அச்சிட்டதுசௌந்தரியலகரி உரையாழ்ப்பாண சமய உரைசிவ தருமோத்திர உரைமருதூர் அந்தாதிசைவ நெறி உரைதிருமுருகாற்றுப்படை உரைசிவ    போதகசிற்றுரைசிவராத்திரி புராண உரை போன்ற உரை நூல்களை எழுதியுள்ளார்.
v  கதிர்மாக சுவாமி கீர்த்தனைதனிப் பாடல்கள்தேவகோட்டை தல புராணம்சித்தி விநாயகர் விளக்கம் போன்ற செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்.
அளிக்கப்பட்ட சிறப்புக்கள்:
v  1971-ல் இலங்கை அரசு தேசீய வீரர் பட்டமும்அஞ்சல் தலையும் வெளியிட்டது.
v  நான்காம் உலகத் தமிழ் மாநாட்டில் தனிநாயக அடிகள் தலைமையில்  ஞானியார் அடிகள்விபுலானந்த அடிகள்ஆறுமுக நாவலர்  போல்வர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன.                                                                                          
            அயலக மண்ணில் பிறந்து தமிழ் மொழி  உரைநடை வளர்ச்சி  பெறக் காரணமாயிருந்தவருள்  இவரும் ஒருவர்பல நூல்களை உரை கண்டும்பதிப்பித்தும்அச்சிட்டும் என பல பரிணாமங்களில் திகழ்ந்த இவர் 5.12.1879 அன்றுஇவ்வுலகினை விட்டு பிரிந்தார்அவர் உயிரோடு இல்லாவிடினும் அவரால் படைக்கப்பட்டஉருவாக்கப்பட்ட அச்சிடப்பட்ட நூல்கள் இன்று வரையிலும் இவ்வாய்வுலகத்திற்கு உயிரோடுத் திகழ்கின்றது.
நோக்கீட்டு நூல்கள்:
அடைக்கலசாமி.எம்.ஆர், 1981, தமிழ் இலக்கிய வரலாறுதிருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 154. டிடிகேசாலைசென்னை - 18.
பாலசுப்பிரமணியன்.சி, 2011, தமிழ் இலக்கிய வரலாறுபாரி நிலையம் 90, பிராட்வேசென்னை-8
தமிழ் ஆசிரியர் தேர்வுக் கையேடு,

சேமுனியசாமி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர்தமிழ்நாடுஇந்தியா.
9786089440


ஆறுமுக நாவலரின் சில எண்ணங்கள்
திசைகள்
41ஆம் பாடம்
திக்கு நான்கு, அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
சூரியன் உதிக்கின்ற திக்குக்குப் பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு வலப் பக்கமாகிய திக்குக்குப் பெயர் தெற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு பிற்பக்கமாகிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு இடப்பக்கமாகிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் தென்கிழக்கு.
தெற்கும் மேற்குமகிய மூலைக்குப் பெயர் தென்மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலைக்குப் பெயர் வடமேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் வடகிழக்கு.
-       பாலபாடம், 2003:35
காற்றும் அதன் மருத்துவக் குணமும்
42ஆம் பாடம்
வடக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு, வாடை என்றும், வடகாற்று என்றும் பெயர்.
தெற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குத், தென்றல் என்றும், தென்காற்று என்றும் பெயர்.
தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும்; அது சித்திரை, வைகாசி மாதங்களில் வீசும்.
கிழக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கொண்டல் என்றும், கீழ்காற்று என்றும் பெயர்.
மேற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கோடை என்றும், கச்சான் என்றும், மேல் காற்று என்றும் பெயர்.
-       பாலபாடம், 2003:35 – 36

      
 35ஆம் பாடம்

நித்தமும் வேட்டியை நன்றாகத் தோய்த்து அலப்பிப் பிழிந்து, உலரப் போடு.
உடம்பில் அழுக்கைத் தேய்த்து ஸ்நானம் பண்ணு.
நெடுநேரம் சலத்திலே நில்லாதே.
உடம்பு வெயர்க்கும் பொழுது ஸ்நானம் பண்ணாதே.
ஸ்நானம் பண்ணின உடனே, சூடு பிறக்கும்படி, ஈரத்தைக்(த்) துவட்டிப் போடு.
தோய்த்து உலர்ந்த சுத்த வஸ்திரம் தரித்துக் கொள்.
அழுக்கு வேட்டியாவது, ஈரவேட்டியாவது, தரியாதே.
சனிக்கிழமை தோறும், எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலை முழுகு.
எப்பொழுதும் உடம்பும், வஸ்திரமும் சுத்தமாய் இருந்தால், வியாதி உண்டாகாது.         - பால பாடம், 2003:32, 1959:23-24, 1950:23-24

ஸ்நானம் - குளியல்
வஸ்திரம் - ஆடை, துணி


     34ஆம் பாடம்
பகலிலும் விடியற் காலத்திலும் நித்திரை பண்ணாதே.
இரவில், ஒன்பது மணிக்குப் பின்பே, நித்திரை பண்ணு.
நித்தமும், விடியுமுன், நித்திரை விட்டு எழுந்துவிடு.
நித்திரை விட்டு எழுந்த உடனே, கடவுளைத் தோத்திரம் பண்ணு.
பல் விளக்கி, நாக்கு வழித்து, வாய் கொப்பளித்து, முகம் கை கால், கழுவி, ஈரந் துவட்டு.
நின்றுகொண்டாவது, நடந்துகொண்டாவது, பல் விளக்கலா காது.
புத்தகத்தை எடுத்துப் புதுப் பாடத்தையும், பழம் பாடங்களையும் படி.
                                    - பாலபாடம் 1950:22-23, 1959:22-23, 2003:32
                                                                                                               

 33ஆம் பாடம்

ஒரு காலை தொடங்கி மற்றைக் காலை வரையும் உள்ள காலம் ஒரு நாள்.
ஆங்கிலேயர்கள், ஒரு நாளை, இருபத்து நான்கு மணிநேரமாகப் பிரித்திருக்கிறார்கள்.
இந்தியர்கள், ஒரு நாளை, அறுபது நாழிகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
முப்பது நாழிகை பன்னிரண்டு மணி.
பதினைந்து நாழிகை ஆறு மணி.
ஏழரை நாழிகை மூன்று மணி.
ஐந்து நாழிகை இரண்டு மணி.
இரண்டரை நாழிகை ஒரு மணி.
ஒன்றேகால் நாழிகை அரை மணி.
ஏழு நாடகள் கொண்டது ஒரு வரம்.
ஒரு வாரத்திலே, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்(ம்), வெள்ளி, சனி என்னும் ஏழு நாட்கல் உண்டு.
நாலு வாரம் கொண்டது ஒரு மாதம்.
பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருஷம்.
                                                     - பால பாடம் 1950:22, 1959:22, 2003:31-32
32ஆம் பாடம்கலசத்திலே பால் கறந்து கொண்டுவா.
பாலை வடித்துக் காய்ச்சிப், பிரை இட்டு, மூடி, உறியிலே வை.
தயிரை மத்தினாலே கடைந்து, வெண்ணெய் எடுத்து வை.
மோரை, நீர் விட்டுப் பெருக்கு.
சலம் வர்த்து, அரிசி களைந்து, சோறு சமை.
அம்மி, குழவிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவிக் கொண்டு, கூட்டு அரை.
பனையின் பதநீரைக் காய்ச்சினால், பனைவெல்லம் உண்டாகும்.
கருப்பஞ் சாற்றைக் காய்ச்சினால், சர்க்கரை உண்டாகும்.
கல், உமி, தவிடு, மயிர் இல்லாமல் அரிசியை நன்றாக ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்.
அடுக்களையானது, உள்ளே வெளிச்சம் வரத் தக்கதாக இருக்க வேண்டும்.
                                                                                     (ஆறுமுகநாவலர், 1950, 1959:21, 2003:31)
சலம் - நீர்

 
30ஆம் பாடம்

காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா.
    பைசா செம்பினாலும், அணாவும் ரூபாவும், வெள்ளியினாலும், வேறொரு கலப்பு லோகத்தினாலும் செய்யப்படுகின்றன.
       பொன்னினாலும் செய்யப்படுகிற நாணயங்களும் உண்டு -  பாலபாடம் 30ஆம் பாடம்(1950,1959:19-20)


காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா
இந்த நாணயமாற்று இப்போது வழக்கிலில்லை. இப்போதுள்ளது ஒரு ரூபாவுக்கு நூறு பைசா - பாலபாடம் 30ஆம் பாடம்(2003:30)


பார்வை: 1. புலவர் கோ. தேவராசன்(பதி.), 2003, பாலபாடம், வசந்தா பதிப்பகம், சென்னை.
2.முட்லர் சி.சுப்பிரமணியம் ஜே.பி., 1950, பாலபாடம் முதற்புத்தகம், வித்தியானு பாலன இயந்திர சாலை, சென்னை.
3. டி.கே. இராஜேஸ்வரன், 1959, பாலபாடம் முதற்புத்தகம், வித்தியானு பாலன இயந்திர சாலை, சென்னை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன