வெள்ளி, 2 ஜூன், 2017

கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்

      கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில் மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால் இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர் அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது. எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.

பயனராதல்...
      முதலில் அந்நிறுவனத்தில் நம்மை ஒரு பயனராக இணைத்துக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் நாம் எளிதில் நூலுருவாக்கம் செய்ய இயலும். அதற்குப் பின்வரும் இணையப்பக்கத்திற்குச் செல்லவேண்டும்.

இப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் sign up என்பதைச் சொடுக்கவும். அதில் கேட்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரியையும், மறைவெண்ணையும் இணைத்துக் கொண்டு புதிய பயனராக இணைத்துக் கொள்க. அதனைக்காட்டும் படம் வருமாறு:
இது புதிய பயனரா எனக் கேட்கும் பகுதியாகும். புதிய பயனர் எனில் I am new user என்பதைத் தேர்வு செய்து sign in using our secure server என்பதைச் சொடுக்கவும். அதன்பிறகு பின்வரும் சாளரம் திறக்கும்.
இதில் பெயர், மின்னஞ்சல், மறைவெண் ஆகியவற்றைத் தந்து create account என்பதைச் சொடுக்கவும். இதன்வழிப் புதிய பயனர் பக்கத்தை உருவாக்கிய பிறகு, பின்வரும் உறுதி மொழிப் படிவம் தோன்றும். அதில் இணைவதற்கான உறுதி மொழியை ஏற்று Agree என்பதைச் சொடுக்க வேண்டும்.
அதன் பின்பு உங்களுக்கெனத் தனிப்பக்கம் உருவாகிவிடும். அப்பக்கத்தில் உங்களைப் பற்றிய குறிப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருந்தால் பின்தோன்றும் படத்தில் காண்பிக்கப்பெறும் Update new என்பதைச் சொடுக்கவும்.
தில் நம்மைப் பற்றிய குறிப்பைத் தருதல் வேண்டும். அதில் பெயர், முகவரி, பணப்பரிமாற்ற குறிப்புகள், வருமானவரிக் குறிப்புகள் ஆகியன கேட்கப்படும். அவற்றை முழுமையாக நிரப்புதல் வேண்டும். அப்பொழுதுதான் நாம் பதிப்பிக்கும் நூல்கள் பதிப்பிக்கப்படும். இல்லையெனில் அவை தற்காலிகச் சேமிப்பில் தங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைப் பின்வரும் படங்கள் காட்டும்.


இதனைக் கவனமாக நிரப்பியவுடன் Tax information என்பதிலுள்ள complete tax information என்பதைச் சொடுக்க வேண்டும். அது பின்வருமாறு விரியும்.
இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளையும் அறிந்து நிரப்புதல் வேண்டும். இது முடிந்தவுடன் save and continue என்பதை அழுத்த வேண்டும். அதன்பின்பு நம் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அப்படம் வருமாறு.
இப்பொழுது கிண்டிலில் நூலுருவாக்கத்திற்கான விருப்பப்பகுதியைத் தேர்வு செய்யவேண்டும். அதாவது மின்னூலா அல்லது அச்சுநூலா என்பதாகும். மின்னூல் எனின் kindle எனக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியை அழுத்தவும். அது பின்வருமாறு விரியும்.






இப்பொழுது பதிப்பிக்கப்பெறும் மின்னூல் குறித்த குறிப்புகளைப் பதிவிடவும். அதில் மொழி, நூற்தலைப்பு, நூல் சுருக்கக்குறிப்பு, பதிப்புக்குறிப்பு போல்வன கேட்கப்பெறும். அதனைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இது நிறைவுபெற்றவுடன் நூற்கோப்பையும் அட்டைக்கோப்பையும் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள் காண்பிக்கப்பெறும். அதன்படி அக்கோப்புகளை உள்ளீடாகத் தரப்பெறுதல் வேண்டும். அதனைக் காட்டும் படங்கள் வருமாறு;




இதனைச் சேமித்து வெளியேற மின்னூல் வெளியீட்டுக்கான  படம் காண்பிக்கும்.
இது ஒரு நூல் செல்பேசி (Android), கணினி (Desktop), திறன்பேசி (Tablet) ஆகிய திரைப்பகுதியில் எவ்வாறு தோன்றும் என்பதைக் காண்பிக்கும். அதை வைத்துக்கொண்டு வடிவ அடிப்படையில் மாற்றம் செய்யவேண்டியவற்றைச் செய்து கொள்ளலாம். இதில் உள்ளீடாகத் தரக்கூடிய சொல்லாய்வி கோப்பு என்பதால் அதன் அமைப்பும், இதில் பதிப்பிக்கப்பெறும் அமைப்பும் மாறுபடும். அதனை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும். இனி நூல் உருவாக்கத்தின் இறுதிப் பணியைப் பின்வரும் படங்கள் காட்டும்.




இவையனைத்தும் சரியாகச் செய்துவிட்டால் நூல் வெற்றிகரமாக வெளியிடப்பெற்று விடும். வெளியிடப்பெறும் நூலுக்கான விலையை நாம் நிறுவிக் கொள்ளலாம்.
முடிப்பாக, இதுவரை கிண்டிலில் நூல் வெளியிடும் முறையினை அறிந்து கொண்டோம். இது ஓர் அமேசான் நிறுவனம் என்பதால் விற்பனை செய்வதில் எவ்வித இடைத்தரகர் முறையை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே,கிண்டிலில் நூலுருவாக்கம் செய்து பயன்பெற்றுக் கொள்க.
துணைநின்றது

முனைவர் .சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (.)
கோயமுத்துர் - 28

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன