செவ்வாய், 6 ஜூன், 2017

அம்பேத்கர்


பாரத நடுவில் பிறந்த
     சாதி வலியின் பேரிடியே
ஆகாய அகல அளவாய்
     விரிந்துநின்ற ஆல விருச்சமே
கோடி கோடி கருப்பர்களின்
     முதன் முதல் தாயே
கடல்வழியினும் உலக வழியினும்
     வழிந்து முழங்கிய கோசமே
குழந்தையில் யான் கண்ட
     போராட்டத்தின் வழியினை
அழைத்து அழைத்துக் காட்டுகிறேன்

     நம் நாட்டின் குற்றங்களில்
சாதியை அழிப்பதற்கே
     லட்ச லட்ச மக்களும்
ஒன்றாய்ச் சேர்ந்து போராடுகிறார்கள்
     தன் மான கடனுக்காக
மகா ராஷ்டியத்தின் மண்ணில்
     பிறந்து வந்த பேரிடியே
மழை இலைக்கு மட்டுமல்ல
     மின்னல் மாயை அவ்வளவுதான்
தன்மதிப்பில் தன்மானத்தை உணராத
     களர்நில மக்களின் உத்தமனே
பாத்திக்கட்டி நாற்று நட்டு
     அறுவடை காணாது போனவனே
கறுப்பு ஜாதி விலங்கிட்டதை
     அறுத்து எறிந்த வைரமே
தங்கத்தின் தன்மை ஒத்த
     மகா பெளத்த பிக்குவே
தூங்கியவரை உட்கார வைத்தீர்
     நின்று இருப்பவர் யாரோ!
தன்மானத்திற்காக பலத்தின் பாடத்தைக்
     கற்றுக் கொடுப்பவர் யாரோ!


கன்னடம் சித்தலிங்கையா
தமிழில் சே.முனியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன