செவ்வாய், 6 ஜூன், 2017

ஸ்ரீபுரந்தரதாசர்

மூலம் - கன்னடம்
தமிழில் - சே.முனியசாமி

      புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
      ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.

      ஒரு முறை ஏழ்மையான பிராமணன் ஸ்ரீநிவாச நாயக்கர் கடைக்கு வந்தார். என் மகனை படிக்க வைக்க வேண்டும், பணம் கொடுத்து உதவுங்கள் எனக் கேட்டார். ஸ்ரீநிவாச நாயருக்கோ எல்லை மீறிய கோபம் வந்தது. பிராமணனுக்கு ஐந்து காசுக்கூட கொடுக்காமல் துரத்தி விட்டார். பின்பு அந்த ஏழை பிராமணன் சரசுவதி பாயிடம் சென்று உதவி வேண்டினான். கருணை கொண்ட சரசுவதிபாய் தன்னிடம் பணம் இல்லாத நிலையறிந்து தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். அவன் மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஸ்ரீநிவாச நாயக்கர்  கடைக்குச் சென்று பணம் வேண்டுமென்று கேட்டான். மூக்குத்தியைப் பார்த்ததுமே அது தன் மனைவியினது என்று புரிந்தது. உடனே மூக்குத்தியை வாங்கிப் பெட்டியினுள் வைத்து விட்டு பிராமணனை அங்கேயே உட்கார வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றார்.
      மனைவியின் மூக்கு வெற்றாக இருந்தது. உடனே மூக்குத்தியைக் கொண்டு வந்து கொடு என்று கட்டளையிட்டார். மூக்குத்தி இல்லையென்று கூறினால் தமக்கு அவமானம் நேரிடும் என்பதை நினைத்துக் கொண்டு, செத்து போவதே மேல் என்று யோசித்தாள். பூசை அறைக்குச் சென்று விசம் குடிக்க ஆயத்தமானாள். இதற்கிடையே அந்த விசம் ஊற்றப்போகும் கின்னத்தில்டண்என்று சத்தம் கேட்டது. மூக்குத்தியக் கண்டதும் உடனே தன் கணவனிடம் காட்டினாள். அதை வியப்புடன் கண்ட ஸ்ரீநிவாச நாயக்கன் கடைக்கு வேகமாக ஓடினார். அங்கே பிராமணனும் இல்லை அவர் வைத்திருந்த மூக்குத்தியும் இல்லை. இதைக் கண்ட ஸ்ரீநிவாச நாயக்கருக்கு ஆச்சரியம் ஆனது. உடனே வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த நிகழ்வுகளைக் கேட்டார். பிராமணன் வடிவில் வந்தது ஸ்ரீவிட்ணு என்பதை அறிந்தார். தன் நிலைக்குத் தானே வருந்தினார். தன் செல்வங்களை எல்லாம் ஏழைக்குக் கொடுத்து புரந்தரதாசனாக ஆனார். அன்று முதல் புரந்தரதாசர் என அழைக்கப்பட்டார்.
       ஹம்பிக்கு சென்றுவியாசராயரஎன்பவரிடம் சீடன் ஆனார். அதன் பின்பு தீட்சைக் கொடுத்தார். இவர் பரம தெய்வபக்தராகி ஸ்ரீகிருட்டிணனை வேறு வேறு வழிகளில் வழிபட்டார். கிருட்டிணன் எனப் பெயரை உச்சரித்துச் சிறு குழந்தைகளுடன் ஆடிப்பாடினார். தாள, தம்பூரி, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளோடு கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிக்கும், புண்ணிய தலங்களுக்கும் சென்று கடவுளை வணங்கினார். ஹம்பியிலிருந்து கேதரா வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பக்தியைக் கொண்டு சேர்த்தார்.
      இவர் மிகப் பெரிய வாத்தியக்காரர். கர்நாடக சங்கீத மற்றும் இலக்கியத்திற்கு மதிக்கத்தக்க வகையில் பல படைப்புகளை அளித்துள்ளார். மிக எளிமையான வடிவில் இனிமையான பாடல்களைப் படைத்துள்ளார். பாடல்களை அனுபவித்துப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். மனித குலம் என்பதற்கு இவர் ஆதாரமாவார். இவர் சுமார் நான்கு லட்சத்து இருபத்தைந்தாயிரம் (4,25,000) கீர்த்தனைகளைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
      ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு வகைகளாக அமைந்துள்ளது. ஆழமான கருத்தினை மிக எளிமையான வார்த்தைகளில் புரியும்படி அமைந்திருப்பதே இவரின் சிறப்பு. கிருட்டிணனைக் குறித்துப் பாடியப் பாடல்கள் இன்றும் மக்களிடையே காணலாகின்றன. இவருடைய சமுதாய கீர்த்தனைகள் சமுதாய நீதிகளை பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. சங்கீதத்திற்கு இவரின் கொடை அளப்பறியது. ‘’மாயா மாவை கெளட ராகவ’’ என்னும் கடினமான ராகத்தை எளிமையாக கற்க வழி செய்தவர்.  பில்லாரி கீதம் இவருடையதாகும். யாரேனும் கர்நாடக சங்கீதம் கற்க வேண்டுமெனில் புரந்தரதாசரை அறியாமல் செல்ல முடியாது. கர்நாடகச் சங்கீதத்திற்கு அடித்தளமிட்ட ஆதி குருதனது என்பதாம் அகவையில் (கி.பி.1565) இம்மண்ணை விட்டுப் பிரிந்தார்.
      தாசர் என்றால் புரந்தரதாசர் என்று தம் குருகளினாலே உரைக்கப்பட்டவர். கர்நாடக தாச பரம்பரையிலேயே சிறப்பு மிக்கவர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன