ஞாயிறு, 26 மார்ச், 2017

தரக்குறியீட்டு எண் பெறும்முறை

முனைவர் .சத்தியராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (.)
கோயம்புத்தூர் - 641 028
            தரக்குறியீட்டு எண் என்பது என்ன? உலகளாவிய நிலையில் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நூலிற்கோ அளிக்கப்பொறும் அடையாளம் எனலாம். இது இப்பொழுது துவையானது. இது கருத்துத் திருட்டைக் குறைப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. அது ஒருவரின் சிந்தனைத் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்பதை இப்பகுதி விளக்குகிறது.
ISSN
ISSN என்பது International Standard Serial Number என்ற விரிசொல்லில் சுருக்கக் குறியீடு. இது உலகளாவிய அளவில் ஒரு நிறுவனத்தை அடையாளப்படுத்துகிறது. இது இணைய, அச்சாக்க இதழ்களுக்கு வழங்கப் பெறும் எண்ணாகும். இவ்வெண் பெற்ற இதழ்களில் வெளிவரும் கட்டுரைகள் தரமுடையதாகக் கருதப் பெறுவதும், பேராசிரியர் பணியிடங்களுக்கும், இவ்வெண் பெற்ற கட்டுரைகள் பரிந்துரைக்கப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வெண் இலவசமாக இந்தியாவில் கிடைக்கிறது. இதனைத் தேசிய நூலக அறிவியல்துறை வழங்குகிறது.
இந்த எண்ணைப் பெறுவதற்குக் கீழ்வரும் இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

(படம்:1)
இந்த இணையப் பக்கத்தில் இருக்கும Apply online எனும் பக்கத்தைச் சொடுக்கவும். அப்பக்கம் பின்வருமாறு விரியும்.

(படம்:2)
இதில் அவ்வெண் பெறுவதற்கு விண்ணப்ப குறிப்பையும், ஒத்துக்கொள்ளல் படிவத்தையும் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக () குறியீட்டைப் போட்டுவிட்டு Apply for ISSN என்பதைச் சொடுக்கப் பின்வரும் விண்ணப்படிவம் தோன்றும்.




இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்துக் குறிப்புகளையும் பூர்த்தி செய்தபின்பு (Submit) என்பதை அழுத்தவும். இதோடு அனைத்தும் முடிந்துவிடுவது கிடையாது. இவ்விண்ணப்பப் படிவத்தைப் படியெடுத்து, அதனுடன் இணைக்க வேண்டிய அனைத்துச் சான்றுகளையும் இணைத்து இவ்வெண் வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புதல் வேண்டும். இப்படிவம் ஒருமாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பெறும். பின்பு, அவ்வெண் வழங்கப்பட்டுவிடும்.
ISBN
ISBN என்பது International Standard Book Number என்பதன் சுருக்கக் குறியீட்டுச் சொல். இந்த எண்ணும் இலவசமாக இந்திய நிறுவனத்தால் வழங்குப்படுகிறது. இதற்கு ஆதார், பான் ஆகிய அடையாளச் சான்றுகள் தேவை. இவ்வெண்ணை இராசாராம் மோகன்ராய் தேசிய நிறுவனம் வழங்குகிறது.
       இந்நிறுவனத்தின் மூலம் தரக்குறியீட்டு எண் பெறுவதற்கு பின்வரும் இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

இப்பக்கத்தில் உள்ள New Applicant Registration எனும் பொத்தானை அழுத்த வேண்டும். அது பின்வருமாறு விரியும்.

இதில் கேட்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதில் பான், முகவரிச் சான்று, ஆதார் ஆகிய சான்றுகளை வருடிப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பதிவேற்ற கோப்புகள் 100kb அளவுடையதாக இருத்தல் வேண்டும். இவை சரியாகச் செய்தவுடன் Save எனும் பொத்தானை அழுத்துக. இப்பொழுது நீங்கள் அதன் உறுப்பினர்  ஆகிவிட்டீர்கள். இனி, எத்தனை நூல்களுக்கு வேண்டும் என்றாலும் தரக்குறியீட்டு எண் பெற்றுக் கொள்ளலாம். அதனைப் பெறுவதற்கு, கீழ்வரும் இணையப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

இவ்விணையப் பக்கத்திலுள்ள Applicant Login எனும் தொடர்பைச் சொடுக்கவுமு. இப்பொழுது நீங்கள் பதிவேற்றிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அந்நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப் பெற்றிருக்கும்.
  அதில் உங்களது பயனாளர் பெயர் (User Name), மறைமுக எண் (Password) அனுப்பப்பெற்றிருக்கும். அதனைப் பயன்படுத்தித் தமக்கான பக்கத்திற்குள் செல்ல வேண்டும். சென்ற பிறகுப் பின்வரும் பகுதித் தோன்றும்.

இதில் உள்ள Apply for New Application எனும் தொடர்பைச் சொடுக்கப் பின்வரும் படிவம் தோன்றும்.




அதனைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இதில் Cover Page, Ttle Verse, Attach Detail ஆகிய கோப்புகளைப் பதிவேற்றவேண்டும். இக்கோப்புகள் 100kb அளவுடையதாக இருத்தல் வேண்டும். இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் Attach Detail என்பதைப் பதிவேற்ற, அதற்குப் பக்கத்தில் உள்ள Download Format என்பதைப் பதிவிறக்கி, அதில் நூல் தலைப்பு, பதிப்பு, பதிப்பு ஆண்டு ஆகியவற்றைப் பூர்த்திசெய்து, பின்பு, இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவையனைத்தும் சரியாகப் பூர்த்தி செய்த பின்பு Save என்பதை அழுத்தவும். இப்பொழுது உங்கள் நூலுக்கான தரக்குறியீட்டு எண் பெறுவதற்கு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு மாத்ததிற்குள் உங்களுடைய பதிவேற்றங்களைப் பார்த்துவிட்டு எண் வழங்கப்பட்டுவிடும்.
பார்வை

6 கருத்துகள்:

  1. ISBN எண் வாங்கும் முறையைக் கொஞ்சம் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ISBN வழங்கும் நிறுவன உறுப்பினரான உடன், நூலட்டைப்படம் 100KB அளவுடையதாக வைத்துக்கொண்டு விண்ணப்பித்தால் கிடைத்துவிடும்.

      நீக்கு
  2. எமக்கு இவையெல்லாம் எட்டாக்கனி..அதனால் இதற்கெல்லாம் நான் ஆசைப்படுவதில்லை..முனைவரே....

    பதிலளிநீக்கு
  3. இன்றுதான் தங்களின் தளத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். வாழ்த்துகள். தரக்குறியீட்டு எண் பெறும் முறை பலரும் அறியவேண்டியதே. பல ஐயங்களைத் தெளிவுபடுத்தியது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன