சனி, 7 நவம்பர், 2015

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம்

பண்டைய தமிழரின் நெல் நாகரீகம் - கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு.
________________________________________________
nel 2
பழனி அருகே உள்ள பொருந்தல் பகுதியில் வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. இந்த மணிகள் பல்வேறு நிறத்தில் காணப்படுகின்றன.
சதுரங்கத்தில் பயன்படுத்தும் காய்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் ஆன தாயக் கட்டைகள், சுடுமண்ணில் ஆன காதணிகள், செப்புக் காசு, தங்கப் பொருள்கள் போன்ற தொல்பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன.
இந்த ஊரில் உள்ள ஈமக் காட்டில் 4 ஈமச்சின்னங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. இந்தக் குழிகளில் 4 கால்களைக் கொண்ட ஜாடியில் நெல் மணிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 2 ஈமக் குழிகளில் கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் என்ற ஆய்வுக் கூட்டத்தில் காலக்கணிப்பு செய்யப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு தமிழி- எழுத்துப் பொறிப்பு பெற்ற பிரிமனை வைக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்துப் பொறிப்பு அறிஞர்களால் வைய்ரா என்று எழுதப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
nel 1
இந்த எழுத்துப் பொறிப்போடு கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் நெல் மணிகள்

கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அந்த நிறுவனம் ஆய்வறிக்கை கொடுத்திருக்கிறது. அதனால் அந்த நெல்லோடு இருந்த தமிழி- எழுத்துகளும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யலாம்.
நெல்லில் தானாக விளையும் நெல், பயிர் செய்யப்படும் நெல் என்று இரண்டு வகை இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்த நெல்மணிகள் எந்த வகையைச் சேர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைக் கண்டறிய புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வு மூலம் இவை பயிரிடப்பட்ட நெல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜன், தன் ஆய்வு மாணவர்களோடு பழநி அருகே '"பொருந்தல்" என்ற கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு, பல புதிய திறப்புகளை வழங்கியுள்ளது. ஒரு ஜாடியில் இருந்த இரண்டு கிலோ நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பரியம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நிரூபித்தது. அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் 'வயிர’ என்ற தமிழி எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழி வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது.
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...’ என்பதை வெறுமனே இலக்கியப் பெருமிதமாகப் பேசித் திரிந்ததை வரலாற்று ஆவணங்களுடன் நிரூபித்த ராஜனின் பணி மகத்தானது!
பழனிக்கு அருகில் தென்மேற்கில் இருக்கும் பொருந்தல் என்ற கிராமத்தில் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெல்லும், தமிழி பொறிப்பு கொண்ட புரிமனையும், சவஅடக்கம் செய்யும் தாழிகள் போன்றவை கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.
இவை கி.மு 490 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால் தெரியவந்திருக்கிறது.
கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத்தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் மூலம், அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.
நன்றி : Ancient Tamil Civilization.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015.
நன்றி : faceboo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன