திங்கள், 28 செப்டம்பர், 2015

நம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்!

கும்பா குண்டா கூடவே
கம்பு கேப்பை குருதாளி
காணாது போயிற்றே!
நம்பு அதுவே
நலம்தரும் நல்லுணவு!
முன்னோர் எளிய உணவு
பர்க்கரும் பீசாவும்
பானிப் பூரியும் பிரைடுரைசும்
நூடூல்சும் பரோட்டாவும்
புதுவரவு இன்று!
பழையன கழிதலும்
புதியன புகுதலும் இதுதானோ?
சாலையோரம் காட்சியாய்
எளிய உண்டி பவனி வருதே – நன்று
கண்டு நீபோய் உண்டு
கண்ட நோய்கள் ஓட்டு!
நாக்குச் சுவைதேடும்
நாவடக்கம் கொள்வாய்
நலம்தருமே என்றும்
உரைத்திடு! விதைத்திடு!!
நலம்பெறட்டும் நல்லுணவால்
நானிலமும் வளம்பெறவே!
நானில மக்கள் நலம்பெறவே!
வள்ளுவன் சொன்ன
உழவுச் சிந்தை ஒளிரட்டுமே!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


ம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

1 கருத்து:

  1. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன